சிங்கப்பெண் போலீசுக்கே இந்த நிலையா? விசிலடித்து தகாத வார்த்தைகள் பேசி அராஜகம் செய்த நபர்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விழுப்புரம் பெருந்திட்ட வளாகம் அருகே சிங்கப் பெண் படைபோலீசாரிடம் தகாத வார்த்தைகள் பேசி, விசிலடித்து கிண்டல் செய்து அராஜகம் செய்த நபர் கைது செய்யப்பட்டார்.

தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதல்வர் விஜய் 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை'யை உருவாக்கினார். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த படையில் உள்ள பெண் போலீசார் தொடர்ந்து ரோந்து பணிகளை மேற்கொள்வார்கள்.

Singap Penn

அதன்படி தமிழகத்தில் மாவட்டந்தோறும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில் உள்ள பெண் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் விழுப்புரம் பெருந்திட்ட வளாகம் பகுதியில் இன்று இரவு 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை'யில் உள்ள பெண் போலீஸ் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கிருந்த நபர் 'விசில்' அடித்து போலீஸை தகாத வார்த்தைகளில் திட்டியதோடு, கிண்டல் செய்து அராஜகம் செய்தார்.

இதுபற்றி சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையின் காவல்உதவியாளர் பிரபாவதி கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீசார், சிங்கப்பெண் போலீசாருக்கு பாதுகாப்பு கொடுக்க வந்ததோடு அராஜகத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் அவரது பெயர் திலீப் குமார் என்பதும், அவர் குடிபோதையில் இருந்ததும் தெரியவந்துள்ளது. அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+