திருக்குறளை இனத்தின் அடையாளமாக நிலைநிறுத்த வேண்டும் - வைரமுத்து
சென்னை: மதுரையில் வள்ளுவர் மறை வைரமுத்து உரை கையொப்பத் திருவிழா நேற்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று புத்தகங்களைப் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில், திருக்குறளை எந்த அரசும் அரசனும் சட்டமாக்கவில்லை. இனிவரும் தலைமுறையேனும் திருக்குறளுக்கு உரிய பெருமையை வழங்கி இனத்தின் அடையாளமாய் நிலைநிறுத்த வேண்டும் என்று வைரமுத்து தெரிவித்துள்ளார்.
மதுரையில் கவிஞர் வைரமுத்துவின் 'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' நூல் கையொப்பத் திருவிழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று நூல்களைப் பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சி குறித்து கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியுள்ளதாவது:

மதுரையில் நேற்று
'வள்ளுவர் மறை
வைரமுத்து உரை'
கையொப்பத் திருவிழா
நிகழ்ந்தேறியது
ஆயிரம் பேர்
வரிசையில் நின்று
நூல் பெற்றார்கள்;
அனைத்து நூல்களிலும்
கையொப்பமிட்டேன்
பெரியோர் முதல்
இளையோர் வரை
என் சமகாலச் சமுதாயம்
வள்ளுவர் மறை
வைரமுத்து உரையை
வரவேற்று மகிழ்கிறது
உயர் நீதிமன்ற நீதிபதி
விக்டோரியா கௌரி,
இஸ்ரோ விஞ்ஞானி
வேலாயுதம் பிள்ளை
இருவருக்கும் நூல் கொடுத்தேன்
"திருக்குறள்
ஓர் அனாதை அறிவு
பைபிளின் பழைய ஏற்பாடு
யூதர்களின் சட்டமானது.
கன்பூசியஸின் அறக்கருத்துக்கள்
சீனாவின் சட்டங்களாயின.
மனுதர்மத்தின் கூறுகள்
இந்தியச் சட்டங்களாயின.
குர்ஆனின் திருவாசகங்கள்
இஸ்லாமியச் சட்டங்களாயின
ஆனால் திருக்குறளை
எந்த அரசும் அரசனும்
சட்டமாக்கவில்லை
இனிவரும் தலைமுறையேனும்
திருக்குறளுக்கு
உரிய பெருமையை வழங்கி
இனத்தின் அடையாளமாய்
நிலைநிறுத்த வேண்டும்"
என்றேன்". என்று குறிப்பிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications