சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தெரிஞ்சுடுச்சு.. தெரிஞ்சுடுச்சு.. மத்தியில் யார் ஆட்சின்னு தெரிஞ்சுடுச்சு.. ப.சிதம்பரம் கணிப்பு!

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆட்சியமைக்க போவது யார் ? ப.சிதம்பரம் கணிப்பு!

    சென்னை: மத்தியில் யார் ஆட்சியமைக்க போகிறார்கள் என்பது தெளிவாக தெரிந்துவிட்டது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

    நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை 6 கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில் இறுதிக்கட்ட தேர்தல் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

    இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் முடிவுகள் வரும் 23ஆம் தேதி வெளியாகிறது.

    Next government will be formed by non-BJP parties including the Congress: P. Chidambaram

    இந்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டிருப்பதாவது 6 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் ஆட்சி அமைப்பது பற்றி தெளிவாகி உள்ளது. பாஜக அல்லாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மத்தியில் அடுத்து ஆட்சி அமைக்கும்.

    தோல்வி பயத்தை மறைக்கவே 300-க்கும் அதிகமான இடங்களை வெல்வோம் என்று பாஜக கூறி வருகிறது.

    பிராந்திய அடையாளங்கள், வரலாற்று கலாச்சாரத்தை இழிவுப்படுத்தி வரும் பா.ஜனதாவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு ப.சிதம்பரம் டிவிட்டியுள்ளார்.

    English summary
    Former Minister of Finance P. Chidambaram has said After 6 phases of polling, it is absolutely clear that the next government will be formed by non-BJP parties including the Congress.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X