என்னங்க இது.. ஒரே இடத்தில் வந்து நின்ற நிகிதா - திருமாறன்.. அங்கே என்ன நடந்தது? குழப்புதே!
சென்னை: நிகிதா குறித்து நாளுக்கு நாள் அதிர்ச்சி தரும் தகவல்கள், செய்திகள் வெளியாகும் நிலையில், அவர் சமீபத்தில் கலந்து கொண்ட கூட்டம் ஒன்றை பற்றிய சுவாரசிய தகவலும் வெளியாகி உள்ளது.
நிகிதா வேலை மோசடியில் மட்டுமல்லாது, பல திருமண மோசடிகளிலும் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக, நிகிதாவால் பாதிக்கப்பட்ட தென்னிந்திய பார்வேர்ட் பிளாக் திருமாறன் என்பவர் பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டியில், நிகிதா தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். "நிகிதாவை எனக்கு 21 வருஷத்துக்கு முன்னாடியே தெரியும். திருமண மோசடியில் பாதிக்கப்பட்டதில் நானும் ஒருவன். நிகிதாவுடன் ஒரு நாள் தான் என்னோட திருமண வாழ்க்கை. ஆனால் பல லட்சம் அவர் ஏமாற்றி விட்டார்" என்று திருமாறன் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "அவர் என்னிடம் 20 லட்சம் வரை ஏமாற்றி உள்ளார். அவரின் அப்பா என்னிடம் 10 லட்சம் வாங்கிவிட்டுத்தான் விவாகரத்து கொடுக்கவே ஒப்புக்கொண்டார். அவர் குடும்பமே ஒரு சீட்டிங் குடும்பம். தாலி கட்டிட்டு ஒருநாள் வாழ்வார்... அதன்பின் வேறு எங்காவது ஓடி போயிட்டு வரதட்சணை கேஸ் போடுறது தான் நிகிதாவுக்கு வேலை. இதை வைத்து பல முறை ஏமாற்றி உள்ளார்" என்று நிகிதாவால் ஏமாற்றப்பட்ட திருமாறன் தெரிவித்துள்ளார்.
சுவாரசிய சம்பவம்
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் திருமாறன் - நிகிதா இருவரும் சமீபத்தில் ஒரே கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டனர். மதுரை முருகன் மாநாட்டில் நிகிதா கலந்து கொண்ட சம்பவம் தற்போது கவனம் பெற்றுள்ளது. இந்த போட்டோ வைரலாகி வருகிறது. நிகிதா பல அரசியல் தலைவர்களுடன் தனக்கு நெருக்கம் என்று கூறி அரசியல் ரீதியாக பலருக்கு அழுத்தம் கொடுத்து வந்தது அம்பலம் ஆகி உள்ளது. இதே கூட்டத்தில் திருமாறனும் கலந்து கொண்டார். இரண்டு பேருமே ஒரே நிகழ்வில் இருந்துள்ளனர். ஆனால் இவர்கள் சந்தித்துக்கொள்ளவில்லை. இவர்கள் விவாகரத்திற்கு பின் சந்திக்கவோ, பேசவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூன் 22, 2025 அன்று, இந்து முன்னணி சார்பில் மதுரையில் "முருகன் பக்தர்கள் மாநாடு" என்ற ஒரு பெரிய ஆன்மீக நிகழ்வு நடந்தேறியது. இந்த மாநாட்டில், தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் ஐந்து லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை வழிபட்டனர். ஆறு முக்கியமான முருகன் கோயில்களின் மாதிரி வடிவங்கள் இங்கே காட்சிப்படுத்தப்பட்டன, மேலும் நாள் முழுவதும் வழிபாட்டு நிகழ்வுகள் மற்றும் பக்திப் பாடல்கள் இசைக்கப்பட்டன.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில்தான் நிகிதா கலந்து கொண்டார் . நிகிதா உடன் அந்த மாநாட்டில் அவரின் அம்மாவும் கலந்து கொண்டார். வீல் சேரில் அம்மாவை நிகிதா அழைத்து வந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
அஜித் குமார் மரண வழக்கு: நிகிதா மோசடி குற்றச்சாட்டு
மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா, அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல நபர்களிடம் இருந்து சுமார் 16 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது. நிகிதா மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் உள்ளன.
இதற்கு முன்பே வேலை வாங்கி தருவதாக லட்சங்களில் மோசடி செய்துள்ளார் நிகிதா. அப்படி மோசடி செய்ததோடு இல்லாமல், தலைமறைவாகியுளார். திருமங்கலத்தில் நிகிதா தலைமறைவாக இருந்தபோது, வேலை கேட்டு பணம் கொடுத்தவர்கள் பணத்தைத் திருப்பிக் கேட்டவர்களை கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள், "கொடுத்த காசைத் திருப்பிக் கேட்கிறீர்களா? கொன்று விடுவேன் என்று நிகிதா மிரட்டியதாக" தெரிவித்தனர்.
2011ஆம் ஆண்டு நிகிதா மீது திருமங்கலத்தில் புகார் அளிக்கப்பட்டது. அவரது குடும்பத்தினர் மீது ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆனாலும், அவர் தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டார். ஆலப்பட்டியில் உள்ள தனது வீட்டை கல்லூரி நிர்வாக இயக்குனரிடம் விற்க முயன்று 25 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். மேலும், மற்றொரு நபரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 25 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். இந்த வழக்குகள் தற்போது நிலுவையில் உள்ளன.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications