அருப்புக்கோட்டை அல்ல.. கிழக்கு தாம்பரம்.. நிர்மலா தேவி வாழ்க்கை திசை மாறியது இங்குதான்!
Recommended Video

சென்னை: கணவரின் கள்ளக்காதலால் கிழக்கு தாம்பரத்தில் நிர்மலா தேவி யின் வாழ்க்கை திசை மாறியது.
அருப்புக்கோட்டையை சேர்ந்த பேராசிரியை நிர்மலா தேவி (46), கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில் அவர் சிபிசிஐடி போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் கணவரின் கள்ளக்காதலால் அவரது வாழ்க்கை எப்படி திசை மாறியது என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
[10 பேருடன் சரமாரி தொடர்புகள்.. இடையே வெளியூர் டூர் வேறு.. அதிர வைக்கும் நிர்மலா தேவி வாக்குமூலம்]

குடும்பம்
நிர்மலா தேவிக்கும் அருப்புக்கோட்டையை சேர்ந்த சரவண பாண்டியனுக்கும் 1996-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். 2003-ஆம் ஆண்டு சரவண பாண்டியன் சென்னையில் பணிபுரிந்த போது கிழக்கு தாம்பரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.

சமாதானம்
அப்போது பக்கத்து வீட்டு பெண்ணுடன் சரவண பாண்டியனுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. இந்த விவகாரம் நிர்மலாவுக்கு தெரியவரவே அவர் தற்கொலைக்கும் முயற்சித்துள்ளார். இதையடுத்து சமாதானம் என்ற பெயரில் உறவினர் ஒருவர் வந்துள்ளார்.

10 பேருடன் தொடர்பு
அவருடன் நிர்மலா தேவிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. இதன் பிறகு கணவருக்கு தொழிலில் நஷ்டம், நிர்மலா தேவியின் வேலை என பல்வேறு காரணங்களுக்காக அவருக்கு 10 பேருடன் தொடர்பு ஏற்பட்டதாக அவராகவே வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

மறுக்க முடியாது
கணவரின் கள்ளக்காதலுக்காக தற்கொலைக்கு முயன்ற நிர்மலா தேவி இது போல் பாதை மாறியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரங்கள் அனைத்தும் கணவருக்கும் தெரியும் என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். தனது சுயநலத்துக்காக நிர்மலா தேவி பாதை மாறியதை கணவர் தடுக்கவே இல்லை என்பது நன்றாக தெரிகிறது. நிர்மலா தேவியின் கள்ளத்தொடர்புகள் அனைத்தும் கணவருக்கு தெரிந்திருந்தும் அவரை
தடுக்காமல் விட்டதும் அவர் கால் போன போக்கில் சென்றதற்கு ஒரு காரணமாகிவிட்டது என்பதையும் மறுக்க முடியாது.

நிதர்சனம்
கணவர் செய்தார் என்பதற்காக அதே தவறை நிர்மலா தேவியும் செய்தார் என்பதை நியாயப்படுத்த முடியாது. ஆனால் கணவரின் கள்ளக்காதல் வாழ்க்கைதான் அவர் வாழ்வில் இத்தனை புயல்கள் வீச காரணமாகிவிட்டன என்பது மட்டும் நிதர்சனம். மொத்தத்தில் நிர்மலா தேவியும், சரவணபாண்டியனும் ஜாடிக்கேற்ற மூடிகள்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications