Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கலகலன்னு வந்த நிர்மலா தேவி.. தீர்ப்பை கேட்டதுமே மாறிய அந்த முகம்..மக்களின் கவனத்தை திருப்பிய பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று காலையிலிருந்து கலகலப்பான காணப்பட்ட நிர்மலாதேவி திடீரென முகம் வாடிப்போய், கண்கலங்கி விட்டாராம்.. இன்றைய தினம் அவருக்கு 10 வருடம் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

நிர்மலா தேவி படித்தவர்.. துணிச்சலானவர்.. எதற்கும் அஞ்சாத தைரியமிக்க ஒரு பெண்.. அதிலும் பேராசிரியையாக இருந்தவர்.. 4 வருடங்களுக்கு முன்பு பலமுறை தலைப்பு செய்திகளாக மீடியாவில் இடம் பிடித்தவர்.

Nirmala Devi Srivilliputhur Court Dress mannerism and Why did Nirmala Devi suddenly cry in Virudhunagar

நடவடிக்கை: ஒவ்வொரு முறை கோர்ட்டுக்கும் நிர்மலா தேவி வரும்போதும், திரும்பி செல்லும்போதும் தமிழக மக்களால் இவரது நடவடிக்கைகள் கூர்ந்து கவனிக்கப்பட்டன.. முக்கியமாக நிர்மலாதேவியின் உடை, அலங்காரம் அனைவராலும் கவனிக்கப்பட காரணம் சாட்சாத் நிர்மலாதேவியேதான்.

கோர்ட்டுக்கு எப்போது வந்தாலும் டிப்-டாப்பாக டிரஸ் செய்து கொண்டும், கழுத்து நிறைய நகைகள், தலை நிறைய மல்லிகைப்பூவுடன் வருவார் நிர்மலாதேவி. பிறகு திடீரென வினோதமாக நடந்துகொள்வார்..

காமாட்சி அம்மன்: ஒருமுறை இப்படித்தான் கோர்ட்டுக்கு வரும்போது, முடியை வெட்டி காதில் தொங்க விட்டு கொண்டார்.. பிறகு கொஞ்ச நேரத்தில் அதை அவிழ்த்து கொண்டார்.. நான் தான் காமாட்சி அம்மன் என்றார்.. அப்படியே ராத்திரி நேரத்தில் தலைவிரிகோலமாக தர்காவுக்குள் நுழைந்து "பேய் பிடிச்சிருக்கு" என்று அலப்பறையை தந்து, அருப்புக்கோட்டையை அலறவைத்தார். இவ்வளவும் அன்று ஒரே நாளில் பார்த்து மிரண்டு போன நமக்குதான் பேய் பிடிச்ச மாதிரி ஆகிவிட்டது.

ஆனால், மறுநாளே நார்மல் மோடுக்கு வந்து விட்டார் நிர்மலா. தன் வக்கீலுக்கு போனை போட்டு, "எனக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது, டாக்டரிடம் கூட்டிச் செல்லுங்கள்" என்று போனை போட்டு கேட்டாராம்.. இப்படி போனில் கேட்கப்பட்டது ரெக்கார்ட் செய்யப்பட்டு அதுவும் வைரலானது.

கருத்து கணிப்பு: நிர்மலாதேவியின் நடவடிக்கைகளை வைத்து, நம்முடைய "ஒன் இந்தியா தமிழில்" வாசகர்களிடம் கருத்து கணிப்பு ஒன்றையும் நாம் அன்றைய நாளில் நடத்தியிருந்தோம்.. "நிர்மலா தேவி செய்வது டிராமாவா? உண்மையிலேயே பாதிக்கப்பட்டிருக்கிறாரா? தெரியலையே?" என்று 3 ஆப்ஷன்களையும் தந்திருந்தோம்.

Nirmala Devi Srivilliputhur Court Dress mannerism and Why did Nirmala Devi suddenly cry in Virudhunagar

ஆனால் நம் மக்கள் தெளிவாகவே இருந்தார்கள்.. நிர்மலாதேவி செய்வது டிராமா என்று 72.66 சதவீத மக்கள் அப்போது கருத்து கூறியிருந்தார்கள்.. "பாதிக்கப்பட்டிருக்கிறார்" என்பதற்கு 19.49 சதவீத மக்களும், "தெரியலையே" என்பதற்கு 7.85 சதவீத மக்களும் வாக்களித்திருந்ததை இங்கு நினைவுகூர வேண்டியிருக்கிறது.

தகவல்கள்: இப்படி நிர்மலா தேவியின் செயல்பாடுகளும், உடை அலங்காரமும், சிகை அலங்காரமும் தமிழக மக்களின் கவனத்தை பெரிதாகவே ஈர்த்திருந்தன.. இதற்கு பிறகு, நிர்மலா தேவி குறித்த தகவல்கள் அவ்வளவாக வெளிவராமலேயே போய்விட்டது.. இந்த வழக்கில் முன்கூட்டியே தீர்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.. ஆனால், நடுவில் கொரோனா பரவல் வந்துவிட்டதால், ஸ்ரீவில்லிப்புத்தூர் மகளிர் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை தாமதமாகவே நடந்தது.

இதில், என்ன மாதிரியான தீர்ப்பு கிடைக்க போகிறதென்று தெரியவில்லை.. காரணம், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம், விபச்சார தடுப்புச் சட்டம், தொழில்நுட்பத்தைத் தவறாக பயன்படுத்திய பிரிவுகளில் வழக்கு என பல்வேறு தரப்பில் வழக்குகள் பதிவாகி, விசாரணையும் நடத்தப்பட்டதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலகலப்பு: நேற்றைய தினம் தீர்ப்புக்காக நிர்மலா தேவி கோர்ட்டுக்கு வந்திருந்தார்.. காலையில் இருந்தே கலகலப்புடன் காணப்பட்ட நிர்மலாதேவி, நீதிபதியின் தண்டனை பறறிய அறிவிப்பை கேட்டதுமே சோகமாகவிட்டாராம்.. கலங்கிய கண்களுடன் போலீஸ் வேனில் ஏறினார்... நேற்றே கலங்கிய கண்களுடன் சென்றவர், இன்று தண்டனையை அறிவிக்கப்போகிறார் நீதிபதி.. இதை எப்படி ஏற்றுக்கொள்ள போகிறாரோ?என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை- ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. எனினும், இந்த வழக்கை வழக்கை பொறுத்தவரை, இவருக்கு பின்னால் வேறு சிலரும் இருக்கலாம், அவர்களையும் வெளிக்கொணர வேண்டும் என்று இணையவாசிகள் கருத்துக்களை சொல்லி வருகிறார்கள்..

அதுமட்டுமல்ல, காலம் தாழ்ந்த நீதி எப்படி அநீதியாகும்? என்பதற்கு இந்த வழக்கு இன்னொரு உதாரணம் என்றும் சொல்லி வருகிறார்கள். எது எப்படியோ, அப்பாவி மாணவிகளை தவறாக வழிநடத்திய குற்றத்துக்காக, இன்று 10 வருடம் சிறைத்தண்டனை பெற்றிருக்கிறார் நிர்மலா தேவி..!!

பலிகடா: அதேசமயம், அன்றைய தினம் திடீரென தலைவிரி கோலமானது, தர்காவுக்குள் நுழைந்தது, மனநல சிகிச்சை மேற்கொண்டது இப்படி பல்வேறு மனநிலை சூழலுக்குள் ஆட்பட்ட இந்த "பலிகடா" பெண்ணின், நிஜமான மனநிலைமையும் அன்று எப்படி இருந்திருக்கும் என்பதையும் நாம் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டியிருக்கிறது!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+