ஸ்டெர்லைட்டை விட 100 மடங்கு பிரச்சினை.. என்எல்சி-யால் 5 மாவட்டங்கள் பாதிப்பு.. அன்புமணி ராமதாஸ்!
ஸ்டெர்லைட் ஆலையை விட 100 மடங்கு பிரச்சினை கடலூரில் நடைபெறுவதாக அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விட 100 மடங்கு என்எல்சி நிறுவனத்தால் கடலூரில் நடைபெற்று வருவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். என்எல்சி-யால் 5 மாவட்ட மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறிய அன்புமணி, அடுத்த ஆண்டு தனியாருக்கு விற்பனை செய்யப்போகும் என்எல்சி நிறுவனத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தப்படுவது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, கடலூா் மாவட்டத்தில் பாமக சாா்பில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த போராட்டத்துக்கு வணிகா்கள், விவசாயிகள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் அந்தக் கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டார்.

பாமக முழு அடைப்பு போராட்டம்
அதன்படி கடலூரில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பிற்காக 7,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடலூரில் 50% தனியார் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் சூழலில், அரசுப் பேருந்துகள் வழக்கம்போல செயல்படுவதாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.

அன்புமணி ராமதாஸ் பேட்டி
அதேபோல் இன்று கடைகளும் செயல்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் ஏற்கெனவே கூறியிருந்த நிலையில், பெரும்பாலான டீக்கடைகள், உணவகங்கள் வழக்கம்போல் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சென்னையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், இன்று கடலூரில் பாமக சார்பில் என்எல்சி நிறுவனத்தை கண்டித்து முழு அடைப்பு போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

ஸ்டெர்லைட்டை விட அதிக பிரச்சினை
இதனை நான் மகிழ்ச்சியோடு சொல்லவில்லை. மக்களை அவதிப்படுத்த வேண்டும் என்பது எங்களின் நோக்கமல்ல. மக்களுக்கு கடலூரில் நிகழ்ந்து வரும் அவலங்களை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதே எங்களின் நோக்கம். இந்த என்எல்சி சார்ந்த பிரச்சினை மட்டும் கிடையாது. இது கடலூரில் மட்டுமல்லாமல் 5 மாவட்டங்களின் பிரச்சினை. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை 100 மடங்கு அதிக பிரச்சினை என்எல்சி-யால் கடலூரில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு அரசு ஆதரவளித்து வருகிறது.

நிலத்தடி நீர் மட்டம்
ஒரு பக்கம் விவசாயத்திற்கு தனி பட்ஜெட் போட்டுவிட்டு, இன்னொரு பக்கம் விவசாயிகளின் நிலங்களை பிடுங்குகிறார்கள். விவசாயிகளுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் போக்கை கண்டிக்கிறோம். என்எல்சியை எதிர்த்து பாமக தொடர்ந்து போராடி வருகிறது. கடலூரில் 8 அடியில் கிடைத்த நிலத்தடி நீர், என்எல்சி வந்தபின் 1,000 அடிக்கு கீழ் சென்றுவிட்டது. என்எல்சி-யிடம் ஏற்கனவே 10 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது. அதில் நிலக்கரி எடுத்தால் இன்னும் 30 ஆண்டுகளுக்கு எடுக்கலாம்.

தமிழர்கள் புறக்கணிப்பு
அதுமட்டுமல்லாமல் என்எல்சி நிறுவனத்தை 2025ம் ஆண்டுக்குள் தனியாரிடம் விற்கப் போகிறோம் என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கூறியுள்ளது. இந்த சூழலில், எதற்காக விவசாயிகளின் நிலங்களை திமுக கையகப்படுத்தி என்எல்சி-யிடம் ஒப்படைக்கிறது என்று கேள்வி எழுப்பினார். ஏற்கனவே கடலூரில் என்எல்சி நிறுவனத்திற்காக நிலம் கொடுத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்படவில்லை. 66 ஆண்டுகளில் சிலருக்கு மட்டுமே என்எல்சி-யில் பணி வழங்கப்பட்டுள்ளது.

இது வெறும் தொடக்கம் மட்டுமே
அண்மையில் தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் யாருக்கும் வேலை கொடுக்கப்படவில்லை. எல்லா பிரச்சினைகளிலும் மத்திய அரசை எதிர்க்கும் திமுக, என்எல்சி விவகாரத்தில் மட்டும் எதற்காக ஆதரவளித்து வருகிறது. இது தமிழ்நாட்டு விவசாயிகளின் பிரச்சினை. இன்று பாமக நடத்தி வரும் முழு அடைப்பு போராட்டம் ஒரு அடையாளம் மட்டுமே தான். அடுத்தடுத்து தீவிர போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
-
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு












Click it and Unblock the Notifications