லெப்டில் இண்டிகேட்டர் போட்டு.. ரைட்டில் போன பாமக.. பாஜகவுடன் கூட்டணி வைத்தது எப்படி? என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக - பாமக கூட்டணி தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலுக்கு உறுதியாகி உள்ளது. பாஜகவுடன் கூட்டணி அமைத்து பாமக நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கும் என்று பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் பேட்டி அளித்துள்ளார்.

இன்று காலையில் இருந்து மாலை பாமக - அதிமுக கூட்டணியே உறுதியாகும் என்று தகவல்கள் வந்தன. பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்காக எடப்பாடி பழனிசாமி மிகப்பெரிய ஆஃபர் ஒன்றை பாமகவிற்கு கொடுத்ததாக செய்திகள் வந்தார்.

No AIADMK How did BJP convince Anbumani Ramadoss to complete the PMK alliance


இரண்டு நாட்களாக அதிமுக சார்பாக பாமகவின் நிறுவனர் ராமதாஸிடம் பேச்சுவார்த்தை நடந்து வந்தது
. இப்போது வைக்கும் கூட்டணியை 2026லும் தொடரலாம். நாம் சேர்ந்தால் சில இடங்களில் 2ம் இடம் அல்ல வெற்றிபெறும் வாய்ப்பு கூட உள்ளது. பாஜக கூட்டணியில் அதற்கு வாய்ப்பு இல்லை.

அன்புமணியிடம் பேசுங்கள். நீங்கள் விரும்பும் தொகுதியை கண்டிப்பாக கொடுக்கிறோம் என்று அதிமுக சார்பாக பேசப்பட்டு இருக்கிறது. எடப்பாடி கொடுத்த இந்த ஆபர்தான் பாமகவை அதிமுக பக்கம் இழுத்துள்ளதாம்.

2026 தேர்தலில் அதிமுக கூட்டணி நல்ல பலன் தரும் என கட்சிகாரர்கள் சொல்கிறார்கள் என சொல்லி அதிமுக உடன் கூட்டணி வைக்க பாமக முடிவு செய்துள்ளதாம் . 7 லோக்சபா சீட், + தேர்தல் நிதி என்று அதிமுக உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

இதை உறுதி செய்யவே சென்னையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பாமக எம்எல்ஏ அருள் சந்திப்பு நடத்தினாராம். எடப்பாடியின் சொந்த மாவட்டத்தில் உள்ள சேலம் தொகுதியை கூட கொடுக்கிறோம். அதை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்களே நில்லுங்கள். ஆனால் அதிமுக கூட்டணிக்கு மட்டும் வந்துவிடுங்கள் என்று எடப்பாடி கோரிக்கை விடுத்துள்ளாராம்.

இதை பாமகவும் ஏற்றுக்கொண்டு கூட்டணியை உறுதி செய்யும் முடிவில் இருந்ததாக தெரிகிறது.

பாஜகவினர் பேச்சு; ஆனால் அதற்குள் உள்ளே புகுந்து பாஜக டெல்லி தலைவர்கள் சிலர் பாமகவுடன் பேசி உள்ளனர். அன்புமணியிடம் பேசி கூட்டணி தொடர்பாக ஆலோசனை செய்துள்ளனர். பாஜக கிட்டத்தட்ட 10 தொகுதிகள் + 1 ராஜ்ய சபா சீட் வரை ஆபர் செய்த்தாக கூறப்படுகிறது.

பாஜகவுடன் கூட்டணி வைத்தால்.. எப்படியும் பாஜக மீண்டும் வெல்லும்.. அதன் மூலம் லோக்சபா தேர்தலில் நாமும் வென்று அமைச்சர் ஆகலாம் என்று அன்புமணி நினைக்கிறாராம். அதன்படி லோக்சபா தேர்தலில் அன்புமணிக்கு தர்மபுரி தொகுதியை மீண்டும் கொடுக்க வேண்டும். அங்கே திமுக தற்போது வலிமை இழந்துவிட்டது.

அன்புமணி அங்கே வெற்றிபெறும் பட்சத்தில் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும். மொத்தமனாக 10 இடங்களில் போட்டியிட வாய்ப்பு கொடுக்க வேண்டும். இல்லையென்றால் இடங்களை குறைத்துக்கொண்டு.. அன்புமணிக்கு "மீண்டும்" ராஜ்ய சபை செல்ல வாய்ப்பு + அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று பாமக சார்பாக பாஜகவிடம் அன்புமணி கோரிக்கை வைத்து உள்ளாராம். அமைச்சர் பதவிக்கு வாய்ப்பு இல்லை ஆனால் ராஜ்ய சபா உறுதி என்று பாஜக சொல்லி உள்ளதாம்.

இதை பாமக ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. இதன் அடிப்படையிலேயே பாஜக - பாமக கூட்டணி தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலுக்கு உறுதியாகி உள்ளது. பாஜகவுடன் கூட்டணி அமைத்து பாமக நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கும் என்று பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் பேட்டி அளித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+