நோ பெயில்! அப்செட்டில் சாப்பிடாத செந்தில் பாலாஜி! அடுத்த ஹியரிங்கில் வெளியே வரணும்! ஸ்டாலின் திட்டம்
சென்னை: தனக்கு ஜாமீன் கிடைக்காத காரணத்தால் அமைச்சர் செந்தில் பாலாஜி மிகுந்த மன வருத்தத்தில் இருப்பதாக அரசியல் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுகவுக்கு நிதி ஆதாரமாக இருந்த செந்தில் பாலாஜியை முடக்கும் வகையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தது அமலாக்கத்துறை. 90 நாட்களாக சிறையில் இருந்து வரும் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், அமலாக்கத் துறையினரால் கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதி அல்லி விசாரித்தார். செந்தில் பாலாஜி தரப்பில், சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்ததற்கான எந்த ஆதாரங்களும் இல்லை எனவும், சட்ட விரோதமாக பண பரிமாற்றம் நடந்ததாக எந்த சாட்சிகளும் கூறவில்லை என்றும் வாதிடப்பட்டது. வேலைக்காக பணம் கொடுத்ததாக கூறப்படும் நபர்களில் ஒருவர் சாட்சியாக கூட சேர்க்கப்படவில்லை எனவும், மற்ற யாரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்க வில்லை எனவும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது.
பாஜகவில் ஏன் இணையக்கூடாது என விசாரணையின் போது செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை கேட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. வழக்கின் ஆவணங்கள் அனைத்தும் தற்போது அமலாக்கத்துறையிடம் உள்ள நிலையில் எப்படி சாட்சிகளை கலைக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பப்பட்டது.
அமலாக்கத்துறை விசாரணையின் போது, பா.ஜ.வில் ஏன் இணையக் கூடாது என அமலாக்கத் துறை கேட்டதாக கூறப்படும் வாதத்தை மறுத்த அமலாக்கத் துறை தரப்பு, சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்ததற்கான முகாந்திரம் உள்ளதால் தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டது எனவும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டப்படி, அமலாக்கத்துறை விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் ஜாமீன் வழங்க வேண்டும் என கோர முடியாது எனவும், செந்தில் பாலாஜி இன்னும் அமைச்சராக நீடிப்பதால், செல்வாக்கான அவர், சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதால் ஜாமீன் வழங்க கூடாது எனவும் வாதிடப்பட்டது.
இந்த மனு மீது நீதிபதி அல்லி நேற்று தீர்ப்பளித்தார். அமலாக்கத் துறை தரப்பு வாதங்களை ஏற்ற நீதிபதி, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அவரது மனுவை நேற்று தள்ளுபடி செய்தார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி. ஜாமீன் கிடைத்து விடும் என எதிர்பார்த்திருந்த செந்தில் பாலாஜி, மிகவும் அப்செட்டாகி விட்டார்.
உணவு எடுக்கவில்லை: நேற்று இரவு அவர் உணவு எடுத்துக் கொள்ளவில்லை ; யாரிடமும் பேசவும் இல்லை. மிகவும் சோகமாகவே இருந்தார் என்கிறது சிறையில் இருந்து கிடைக்கும் தகவல்கள். ஜாமீன் கிடைக்காததில் திமுக தலைமையும் அப்-செட்டாகியிருக்கிறது. இது குறித்து மூத்த வழக்கறிஞர்களிடம் மு.க.ஸ்டாலின் நேற்று விவாதித்துள்ளார். அப்போது, "செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டால் மட்டுமே ஜாமீன் கிடைக்க வழியிருக்கிறது.
ஏனெனில், இந்த வழக்கில் தொடர்புடைய பலரிடமும் விசாரிக்க வேண்டியதிருக்கிறது. இதில் சிலர் தலைமறைவாகியிருக்கிறார்கள். அதனால், அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜியை ஜாமீனில் விடுதலை செய்தால் சாட்சிகளை கலைத்துவிடுவார் என்ற பாயிண்டுகளைத் தான் அமலாக்கத்துறை தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கும். பி.எம்.எல்.ஏ. சட்டவிதிகளின் படி, இவரை ஜாமீனில் ரிலீஸ் செய்வதால் வழக்கின் போக்கு மாறிவிடாது என நீதிபதிக்கு திருப்தி ஏற்பட வேண்டும்.
இந்த விசயங்கள் நடந்தால்மட்டுமே ஜாமீனுக்கு வாய்ப்பு இருக்கிறது. செந்தில் பாலாஜின் தம்பி அசோக் இருக்கும் இடம் அமலாக்கத்துறைக்கு தெரியும். அவர்களின் கண்காணிப்பில் தான் அசோக் இருக்கிறார். அவரை கைது செய்து ரிமாண்ட் காட்டிவிட்டால் பிரச்சனையின் தீவிரம் குறையும். ஆனால், செந்தில்பாலாஜியை சிறையிலேயே வைத்திருக்க திட்டமிடும் அமலாக்கத்துறை, அசோக்கை கைது செய்ய ஆர்வம் காட்டவில்லை.
இனி செந்தில்பாலாஜி எப்போது தேவையில்லை என கருதுகிறதோ அப்போது அசோக்கை வளைத்து வெளியே காட்டுவார்கள் என்றெல்லாம் ஸ்டாலினிடம் விவரித்திருக்கிறார்கள் வழக்கறிஞர்கள். அதைக்கேட்ட முதல்வர் ஸ்டாலின், "அடுத்த ஹியரிங்கின் போது அவர் ஜாமீனில் வெளியே வரவேண்டும். அதற்கு ஏதேனும் வழிகள் இருக்கான்னு ஆராயுங்கள்" என்று சொல்லியிருக்கிறார் என திமுக தரப்பிலிருந்து தகவல் கிடைக்கிறது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications