53வது நாளாக.. பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் மாற்றம் இல்லை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 53வது நாளாக பெட்ரோல், டீசல் நாடு முழுக்க இன்றும் விலையில் மாற்றமில்லை. சென்னையில் அதே விலையில் இன்றும் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது.

No Change in Petrol and diesel prices in India for 53rd day in India

பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உச்சம் தொட்டது.

இதனால் இந்தியாவில் கடந்த மாதத்திற்கு முன்பு வரை பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்தது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் விலைவாசி உயர்ந்தது. இது மக்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.

இதுவே பணவீக்கத்திற்கும் ஒரு வகையில் காரணமாக அமைந்தது. மே மாதத்திற்கான மொத்த விலை பணவீக்கம் 15.88 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த 24 வருடங்களில் இதுதான் மிக அதிகம் ஆகும். இதையடுத்து கடந்த 2 மாதம் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிரடியாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டது.

இந்த நிலையில் கடந்த 53 நாட்களுக்கு முன்பாக பெட்ரோல் மீதான கலால் வரியை 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 6 ரூபாயும் மத்திய அரசு குறைத்தது. இதன் மூலம் டீசல் விலை லிட்டருக்கு ரூ.7 குறைக்கப்பட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 50 காசும் குறைக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கு விற்பனை செய்யபடுகிறது. ஒரு லிட்டர் டீசல் 94 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

டெல்லியில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூபாய் 96.35 விற்கப்படுகிறது. அதேபோல் டீசல் ஒரு லிட்டர் ரூபாய் 89.52 க்கு விற்கப்படுகிறது. பெங்களூரில் பெட்ரோல் விலை லிட்டர் 101.94 ரூபாயை தாண்டி உள்ளது. டீசல் விலை 87.89 ரூபாயை தாண்டி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+