நெருங்கும் தேர்தல்.. தொடர்ந்து 24 நாட்களாக உயராத பெட்ரோல், டீசல் விலை!
சென்னை: இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் இன்றும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தொடர்ந்து 24 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் ஒரே விலையில் விற்கப்படுகிறது. பல்வேறு மாநில சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.
தினமும் எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தலாம் என்று விதி கொண்டு வந்த பின் தினமும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டது. கடந்த இரண்டு மாதமாக இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்தது. மக்கள் கடுமையாக அவதிப்படும் வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே இருந்தது.

இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர தொடங்கியது. சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் சமயங்களில் குறைந்த போதும் கூட இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்தது.
இந்த நிலையில் தொடர்ந்து 24 நாட்களாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 5 மாநில சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இப்படி பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை
சென்னையில் பெட்ரோல் விலை 93.11 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 86.45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.டெல்லியில் பெட்ரோல் விலை 97.17 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 81.47 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஹைதராபாத்தில் பெட்ரோல் விலை 87.24 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 85.45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
பெங்களூரில் பெட்ரோல் விலை 94.11 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 87.45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மும்பையில் பெட்ரோல் விலை 97.57 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 88.60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதன் காரணமாகவே இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
-
தமிழகத்தில் பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடு.. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பங்குகள் மூடல்.. மக்கள் அவதி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications