சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னை வண்டலூரில் 13 ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா இல்லை.. ஆல் இஸ் வெல்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் சிங்கங்களுக்கு கொரோனா இல்லை என பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன.

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் 15 ஆசிய சிங்கங்கள் இருந்தன. அவற்றுள் 10 சிங்கங்களுக்கு கோவிட் பாசிட்டிவ் இருந்தது.

No corona virus found in 13 lions in Vandaloor

இந்த நிலையில் கொரோனாவுக்கு தலா ஒரு ஆண், பெண் சிங்கங்கள் பலியாகிவிட்டன. வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் மற்ற சிங்கங்களின் உடலில் இருந்து சளி மாதிரிகள் எடுக்கப்பட்டது.

அவை மத்திய பிரதேசம் போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் நிறுவனத்திற்கு (என்ஐஎசட்) கொரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் மற்ற 5 சிங்கங்களுக்கு கொரோனா இல்லை என முடிவுகள் வெளியாகியுள்ளன.

அது போல் ஏற்கெனவே கொரோனா பாதித்த 10 இல் இரு சிங்கங்கள் இறந்த நிலையில் மீதமுள்ள 8 சிங்கங்களுக்கு மீண்டும் நாசி மற்றும் மலக்குடல் மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தன. அதன் முடிவுகளும் வந்துள்ளன. எனவே தற்போது பூங்காவில் இருக்கும் 13 சிங்கங்களுக்கும் கொரோனா இல்லை என முடிவுகள் வெளியாகியுள்ளன.

English summary
No corona virus found in 13 lions in Vandaloor Arignar Anna Zoological Park.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X