திருப்பரங்குன்றம் உட்பட 3 சட்டசபை தொகுதிகளுக்கு ஏப்.18ல் இடைத் தேர்தல் இல்லை.. உச்சநீதிமன்றம் அதிரடி
Recommended Video

சென்னை: தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்படாத திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 சட்டசபை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18ம் தேதி இடைத் தேர்தல் நடத்த உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கும் வரும் 18ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. அத்துடன், காலியாக உள்ள 21 சட்டசபைத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

ஆனால், தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதை காரணம்காட்டி அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கப்படவில்லை.
ஆனால், 3 தொகுதிகளுக்குமான தேர்தல்களை ஒத்திவைப்பதன் நோக்கம், அதிமுக அரசுக்கு பெரும்பான்மையை நிரூபிப்பதில், ஆபத்து வந்துவிட கூடாது என்பதற்காகத்தான் என்று, திமுக குற்றம்சாட்டி வருகிறது.
இதனிடையே, மூன்று தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகள் முடிவுக்கு வந்துவிட்டதால் தேர்தலை நடத்த எந்த தடையும் இல்லை என்று, கூறி, அந்த தொகுதிகளுக்கும், பொதுத் தேர்தல் நடைபெறும், ஏப்ரல் 18ம் தேதி இடைத்தேர்தல் நடத்தக்கோரி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, 3 தொகுதிகளில் ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடத்த முடியுமா என்று, தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் கருத்து கேட்டது. குறுகிய காலமே இருப்பதால், அவசர கதியில் தேர்தல் நடத்த முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதையடுத்து, ஏப்ரல் 18ம் தேதிக்குப் பிறகு, தேர்தல் ரிசல்ட் வருவதற்கு முன்னால், வேறு ஒரு தேதியில் கூட இந்த 3 தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்தலாமே என திமுக தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால், காலம் வரும்போதுதான் தேர்தலை நடத்த முடியும் என்று கூறிய தேர்தல் ஆணையம், உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று வாதிட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தால் விரைந்து தேர்தலை நடத்த முடியாது என்ற வாதத்தை ஏற்றுக்கொண்டு, 3 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18ம்தேதி தேர்தல் நடத்தும்படி உத்தரவிட முடியாது என தெரிவித்தது.
-
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications