பட்டதே போதும்! இனி தாம்பரத்தில் தரைதளத்தில் வீடுகள் கட்ட அனுமதி இல்லை? மேயர் பரிந்துரை ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இனி தாம்பரத்தில் கட்டப்படும் புதிய வீடுகளில் தரைதளத்தில் வீடுகள் இருக்காது என தெரிகிறது.

பிசுபிசுத்து மழை பெய்தாலே சென்னை மிதக்கும். இதில் பெருமழை, புயல் வந்தால் கேட்கவே வேண்டாம். சென்னையின் சில பகுதிகளும் புறநகர் பகுதியும் வெள்ள நீரில் தத்தளிக்கும். அதிலும் கிரவுண்ட் ப்ளோரில் உள்ள வீடுகள் மூழ்கும் அளவுக்கு வெள்ள நீர் சூழும்.

No ground floor houses at Tambaram at very soon, Corporation has plan

கால்வாய்கள் தூர்வாரப்பட்டாலும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் தண்ணீரை அந்த கால்வாய்கள் உள்வாங்காமல் இருப்பதே இந்த வெள்ளம் தேங்குதலுக்கு பெரும் காரணமாகும் என சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடக்கத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து மிக்ஜாம் புயலால் சென்னை கடுமையாக பாதித்தது. திரும்பிய பக்கமெல்லாம் தண்ணீர். பள்ளிக்கரணை, தாம்பரம், கீழ்க்கட்டளை, மேடவாக்கம், மடிப்பாக்கம், வேளச்சேரி, வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கீழ் தளம் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் தேங்கியது.

ஒவ்வொரு இடத்திலும் 4 அடி முதல் 15 அடி வரை தண்ணீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் தங்கள் உடைமைகளை இழந்து தவித்தனர். இதை கருத்தில் கொண்டு தாம்பரத்தில் இனி தரைதளம் இல்லாமல் மட்டுமே வீடுகளை கட்ட அனுமதிக்கப்படும். கடந்த டிசம்பர் மாதம் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்ட போது நகர திட்டக் குழு துறையிலிருந்து அதிகாரிகள் பாதிப்புகளை பார்வையிட்டனர்.

அப்போது பெருங்களத்தூர், சிடிஓ காலனி, இரும்புலியூர், வரதராஜபுரம், கீழ்கட்டளை, பம்மல், திருநீர்மலை ஆகிய பகுதிகளில் உள்ள தரைதள வீடுகள் கடுமையாக வெள்ள நீரில் மூழ்கியிருந்தன. இதுகுறித்து அதிகாரிகள் கூறியிருப்பதாவது: தாம்பரத்தில் பெருங்களத்தூர், இரும்புலியூர், கீழ்க்கட்டளை, திருநீர்மலை ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டுள்ள வீடுகள் தாழ்வான இடங்களில் கட்டப்பட்டுள்ளன.

அது மட்டுமல்லாமல் பெரிய நீர் நிலைகளுக்கு அருகிலேயே கட்டப்பட்டுள்ளன. நிலத்தடி நீரும் மேற்பரப்பு நீரும் இயற்கையாகவே வடிந்து செல்வதால் அந்த இடங்களில் எப்போது மழை பெய்தாலும் வெள்ளம் வருகிறது என்றனர். இந்த சூழலை மேலும் கட்டி முடிக்கப்படாத மழை நீர் வடிகால்கள் மோசமடைய செய்கின்றன. கடந்த வாரம் நகராட்சி திட்டமிடுதல் குறித்தும் வெள்ளத்தை தடுப்பது் குறித்தும் தாம்பரம் மாநகராட்சி அறிக்கை தயார் செய்தது.

இந்த அறிக்கை தமிழக அரசுக்கு அளிக்கப்படுகிறது. தமிழக அரசு ஒப்புதல் அளித்து விட்டால் எங்கள் மாநகராட்சிக்குள்பட்ட புதிதாக கட்டப்படும் கட்டடங்களில் தரை தளத்தில் வீடு கட்டுவது நிறுத்தி வைக்கப்படும். தரைதளத்தை தவிர்த்தாலே போதும் கட்டுமானத்தின் உயரத்தை உயர்த்த குடியிருப்புவாசிகளை கேட்டுக் கொள்ளலாம். சாலையிலிருந்து 3 அடி உயரத்தில் இருக்க வேண்டும்.

பல வீடுகளில் சம்புகளில் உள்ள தொட்டிகளில் அழுக்காக இருக்கின்ற, இதனால் சில நாட்களுக்கு பொதுமக்கள் அந்த தண்ணீரை பயனபடுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. அதிலிருந்து கெட்ட வாடை அடித்தது. அந்த தொட்டிகளை சுத்தம் செய்ய அதிக அளவில் பணத்தை செய்துள்ளோம்.

மழை நீர் உள்ளே நுழைந்து டேங்கிற்கு எந்த சேதாரத்தை ஏற்படாமல் தடுக்க சம்புகளை உயரத்தில் கட்டிகொள்ள குடியிருப்புவாசிகளுக்கு அறிவுறுத்தப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+