ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய தவெக மாநாடு! இன்னைக்கு விக்கிரவாண்டியில் மழை இல்லையாம்! வெதர் அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்யின் தவெக மாநாடு நடைபெறும் விழுப்புரம் மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இல்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதே நேரம், வடதமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் எச்சரித்தள்ளது.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று நடைபெறுகிறது. இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 5 லட்சம் பேர் படையெடுத்துள்ளனர். மாடநாட்டில் எதிர்பார்த்ததைவிட அதிகமான ஆட்கள் பங்கேற்றிருப்பதால், உணவு, குடிநீர் உள்ளிட்டவைக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. மறுபுறம் மழை வந்து மாநாட்டை சொதப்பிவிடக்கூடாது என்று பலரும் எதிர்பார்த்திருக்கின்றனர்.

tamil nadu rains chennai rain weather tvk maanadu

இப்படி இருக்கையில் இன்று விழுப்புரத்தில் கனமழைக்கு வாய்ப்பு இல்லை என சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. இது குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில், "தென்னிந்திய கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 29 மற்றும் 30ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

31ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நவ. 1 மற்றும் 2ம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகள்: இன்று குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 28 முதல் 31 வரை எச்சரிக்கை ஏதுமில்லை.

வங்கக்கடல் பகுதிகள்: இன்று முதல் 31ம் தேதி வரை எச்சரிக்கை ஏதுமில்லை.

அரபிக்கடல் பகுதிகள்: இன்று கேரள கடலோரப்பகுதிகள், லட்சத்தீவின் தெற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை முதல் 31ம் தேதி வரை: எச்சரிக்கை ஏதுமில்லை. மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+