வேறு துறைக்கு சென்றாலும் எங்கள் நட்பை உடைக்க முடியாது.. கமல் குறித்து உருக்கமாக பேசிய ரஜினி!
வேறு துறைக்கு சென்றாலும் எங்கள் நட்பு நீடிக்கும், எங்கள் நட்பை யாராலும் உடைக்க முடியாது என்று கமல்ஹாசன் உடனான நட்பு குறித்து ரஜினிகாந்த் பேசி இருக்கிறார்.
Recommended Video
சென்னை: வேறு துறைக்கு சென்றாலும் எங்கள் நட்பு நீடிக்கும், எங்கள் நட்பை யாராலும் உடைக்க முடியாது என்று கமல்ஹாசன் உடனான நட்பு குறித்து ரஜினிகாந்த் பேசி இருக்கிறார்.
நேற்று சென்னையில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவரும் நடிகருமான கமல் திரைத்துறைக்கு வந்து 60 ஆண்டுகள் ஆனதையொட்டி இதற்காக நேற்று விழா எடுக்கப்பட்டது. சென்னை நேரு உள்விளையாட்டு மைதானத்தில் இந்த விழாவிற்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடந்தது.
நடிகர் ரஜினிகாந்த், வடிவேல், நடிகர் பிரபு உள்ளிட்ட முக்கிய திரைத்துறையினர் பலர் இதில் கலந்து கொண்டனர். 'கமல் 60' என்ற பெயரில் நேற்று இந்த நிகழ்ச்சி நடந்தது.

கமல்ஹாசன்
இந்த விழாவில் கமல்ஹாசன் குறித்து பேசிய ரஜினிகாந்த், கமல்ஹாசனை போல அறிவுஜீவியை சினிமா உலகில் நான் பார்த்தது கிடையாது. அவர்கள் மக்களுக்கான கலைஞன். தமிழ் சினிமா உலகில் மிக முக்கியமான திறமைசாலி அவர்.

நட்பு
நானும் கமலும் மிகவும் நெருக்கம். எங்கள் நட்பை யாராலும் உடைக்க முடியாது. என்ன நடந்தாலும் நாங்கள் ஒற்றுமையாக இருப்போம் . வேறு துறைக்கு சென்றாலும் எங்கள் நட்பு நீடிக்கும். அரசியல், சித்தாந்தம், கொள்கை வேறாக இருந்தாலும் நட்பு எப்போதும் நீடிக்கும்.

பயன்பாடு
கமல்ஹாசனை நாம் பயன்படுத்த வேண்டும். கமல் பேசுவது புரியவில்லையென சிலர் கூறுகிறார்கள். நான் அப்படி சொல்ல மாட்டேன். தூங்குபவர்களை எழுப்ப முடியும், தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. கமல் பேசுவது நன்றாகவே புரிகிறது.

எனக்கு புரியும்
கமல் பேசுவது எனக்கு புரியும்போது மக்களுக்குப் புரியாமல் இருக்குமா? ஏன் அவரை அப்படி விமர்சனம் செய்கிறார்கள் என்று தெரியவில்லை . கமல்ஹாசனின் எதிர்கால பயணம் சிறப்பாக அமைய எப்போதும் என்னுடைய வாழ்த்துக்கள், என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications