Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னை மிரட்ட முடியாது.. தன்மானமே முக்கியம்! கைகூலிகளுக்கு முடிவு கட்டப்படும்.. இறங்கி அடித்த எடப்பாடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: என்னை யாரும் மிரட்ட முடியாது, ஆட்சி அதிகாரத்தை விட தன்மானமே முக்கியம் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அமித்ஷாவை சந்திப்பதற்காக டெல்லி பயணம் மேற்கொள்வதாக தகவல் வெளியான நிலையில் அதற்கும் எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். தர்மபுரியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்த நிலையில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவுறுத்தியதால் அந்த பயணத்தை மாற்றி அமைத்தோம். அதற்கு அமித்ஷாவை சந்திப்பதற்காக சுற்றுப்பயணம் மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகி விட்டது என எடப்பாடி கூறுகிறார்.

ஆட்சி அதிகாரத்தை விட தன்மானமே முக்கியம் என்றும், மத்தியில் உள்ளவர்கள் அச்சுறுத்தல் கொடுத்தது இல்லை. என்னை யாரும் மிரட்ட முடியாது. கைகூலிகளுக்கு முடிவு கட்டப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக பேசியுள்ளார்.

no-one-can-intimidate-me-self-respect-matters-more-than-power-edappadi-k-palaniswami-fires-back

10 நாட்கள் கெடு விதித்த செங்கோட்டையன்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜக மேலிடம் அழைப்பின் பேரில் நாளை டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியானது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாள் கெடு விதித்து இருந்தார்.

இந்த கெடு இன்றுடன் முடிந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற அவர், அதிமுக ஒன்றிணையும் விவகாரத்தில் புரிய வேண்டியவர்களுக்குப் புரிய வேண்டும் என்று கூறியிருந்தார். ஏற்கனவே டெல்லியில் அமித்ஷாவை சந்தித்ததாக செங்கோட்டையன் கூறியிருந்த நிலையில், நாளை எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்ல இருப்பதாக வெளியான தகவல் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஓ பன்னீர்செல்வத்தை சேர்க்க முடியாது

இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது, ஓ பன்னீர் செல்வத்தை கட்சியில் சேர்க்க முடியாது என்பதை மறைமுகமாக கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

தருமபுரி மாவட்டத்தில் நான் வரும் 17, 18 ஆம் தேதிகளில் சுற்றுப்பயணத்தை வைத்திருந்தோம். ஆனால் அன்று மழை பெய்யும் என வானிலை மையம் அறிவுறுத்தி இருந்தது. இதனால் அந்த தேதியில் சுற்றுப்பயணத்தை 27 , 28 ஆம் தேதிகளுக்கு ஒத்தி வைத்தோம். ஆனால் அதற்குள் எடப்பாடி பழனிசாமி அதிமுகவை ஒன்றிணைக்க, இணைப்பதற்காக மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க டெல்லி செல்ல இருப்பதாக செய்திகளை வெளியிட்டு விட்டார்கள்.

கைக்கூலிகளுக்கு முடிவு கட்டப்படும்

அப்படி ஒரு நாளும் நான் செய்ய மாட்டேன். எனக்கு ஆட்சி அதிகாரத்தை விட தன்மானமே முக்கியம். கைக்கூலிகளை வைத்து ஆட்டம் போட்டனர். அவர்கள் இப்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர். கைக்கூலிகளுக்கு விரைவில் முடிவு கட்டப்படும். அதிமுகவை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. சிலர் அதிமுகவை அழிக்க பார்த்தார்கள். ஆனால் அது முடியவில்லை.

அதிமுக அலுவலகத்தை உடைத்தவர்கள் இப்போது அதிமுகவில் சேர வேண்டும் என துடிக்கிறார்கள். துணை முதல்வர் பதவி கொடுத்தும் திருந்தவில்லை. அதிமுக ஆட்சியை கவிழ்க்க 18 பேரை அழைத்துக்கொண்டு சென்றார். எவர் ஒருவர் துரோகம் செய்தால் அவர் நடுரோட்டில் தான் நிற்க வேண்டும்.. அவர்களை எல்லாம் இப்போது எப்படி கட்சியில் இணைக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

அதிமுக அலுவலகத்தை அடித்து உடைத்தவர்களை கட்சியில் சேர்க்க முடியுமா? என்றும் அதிமுக ஆட்சியை கவிழ்க்க 18 பேரை கடத்தி செனறார் அவர்களையும் சேர்க்க முடியுமா? என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருப்பதன் மூலம் ஓ பன்னீர் செல்வத்தை கட்சியில் மீண்டும் இணைக்க வாய்ப்பே இல்லை என்பதை எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக பேசியிருப்பதை காட்டுவதை அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+