தமிழ்நாட்டிற்குள் குரங்கு அம்மை பாதிப்பு வந்துவிட்டதா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன விளக்கம்!
சென்னை: தமிழ்நாட்டில் குரங்கு அம்மை பாதிப்பு யாருக்கும் கண்டறியப்படவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். Mpox அறிகுறியுடன் இந்தியா வந்தவர் எந்த நாட்டில் இருந்து வந்தார்? தற்போது எங்கே இருக்கிறார்? என்ற தகவல்களை மத்திய அரசு ரகசியமாக வைத்துள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே முதல் முறையாக ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் C.L.BAID METHA மருத்துவக் கல்லூரியுடன் இணைந்து மருந்து தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ 4.50 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவ உபகரணங்கள், பல்வேறு மருத்துவ சேவைகளை மக்கள் பயன்பாட்டிற்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

அதைத்தொடர்ந்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், உலகளவில் 63 நாடுகளில் குரங்கு அம்மை நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. நமது நாட்டில் கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலத்தில் தலா ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய பன்னாட்டு விமான நிலையங்களில் குரங்கு அம்மை பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டு பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு யாருக்கும் கண்டறியப்படவில்லை.
குரங்கம்மை அறிகுறியுடன் இந்தியா வந்தவரை தனிமைப்படுத்தி சிகிச்சை தருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அவர் எந்த நாட்டில் இருந்து வந்தார்? தற்போது எங்கே இருக்கிறார்? என்ற தகவல்களை மத்திய அரசு ரகசியமாக வைத்துள்ளது. விமான நிலையங்களில் விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் டிஜிட்டல் போர்டுகள் வைக்கப்பட்டு உள்ளன.
கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு இருப்பதால், தமிழக கேரள எல்லையில் உள்ள 13 சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. குறிப்பாக பெரியவர்கள், குழந்தைகளுக்கு குரங்கு அம்மை அறிகுறிகளான முகம் மற்றும் முழங்கைக்கு கீழ் பகுதியில் புதிதாக கொப்பளங்கள் உள்ளதா என்றும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
குரங்கு அம்மை பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விமான நிலையங்களில் ஸ்லைடுகள் மற்றும் போஸ்டர்கள் திரையில் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன. நகர பகுதிகளில் பொது சுகாதாரத்துறை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது என்றும், மக்களிடையே டெங்கு தொற்று குறித்து போதுமான அளவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்றும், டெங்கு காய்ச்சலால் இதுவரை 5 பேர் உயிரிழந்திருப்பதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications