எம்ஜிஆர் -கருணாநிதி -ஜெயலலிதா நினைவிடங்களை பார்க்க 2 நாட்களுக்கு அனுமதியில்லை! என்ன காரணம் தெரியுமா?
சென்னை மெரினாவில் உள்ள தலைவர்களின் நினைவிடங்களை காண 2 நாட்களுக்கு அனுமதியில்லை
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா - எம்.ஜி.ஆர். -கருணாநிதி -ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்களின் நினைவிடங்களை காண பார்வையாளர்களுக்கு இன்றும் நாளையும் அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பொதுமக்கள் தகுந்த ஒத்துழைப்பு நல்குமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;
''குடியாசு தின விழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் நாள் சென்னை, மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் நடைபெறுவது வழக்கமாகும்.
தற்போது அந்த இடத்தில் இரண்டாம் கட்ட மெட்ரோ இரயில் பணிகள் நடைபெற்று வருவதால், இந்தாண்டு மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலந்து கொள்ளும் குடியரசு தின விழா மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் நடைபெறவுள்ளது.
எனவே, பாதுகாப்பு காரணங்களால் 25.01.2023 முதல் 26.01.2023 முற்பகல் வரை அண்ணா சதுக்கத்தில் அமைந்துள்ள தலைவர்களின் நினைவிடங்களை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.'' இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால் நாளை ஜனவரி 26 குடியரசு தின பொதுவிடுமுறையை ஒட்டி, வழக்கத்தை விட கூடுதல் எண்ணிக்கையில் தலைவர்களின் நினைவிடங்களை காண்பதற்காக மக்கள் குடும்பத்துடன் வருவார்கள் என்பது தான்.
இதனிடையே அரசு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பை முன் கூட்டியே அறிந்தார்களானால் தேவையற்ற அலைச்சல்களை தவிர்க்க முடியும்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications