ஜன் தன் வங்கி கணக்கு வச்சிருக்கீங்களா? நிதி அமைச்சகம் கொடுத்த முக்கிய விளக்கம்! நோட் பண்ணுங்க
டெல்லி: பரிவர்த்தனை எதுவும் இல்லாத ஜன் தன் வங்கிக் கணக்குகளை மூடுமாறு வங்கிகளுக்கு எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று மத்திய நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் துறை விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக கடந்த சில நாட்களாக தகவல் பரவிய நிலையில், நிதி சேவைகள் துறை தனது விரிவான விளக்கத்தினை அளித்துள்ளது.
நாட்டு மக்கள் அனைவருக்கும் வங்கி கணக்கு என்ற பெயரில் கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் ஜன தன் வங்கி கணக்கு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. மத்திய மாநில அரசுகளின் மானியங்கள் உள்ளிட்டவை மூலமே பயனாளிகளின் வங்கி கணகிக்கில் வரவு வைக்கப்படுவதால், ஜன் தன் வங்கி கணக்கு திட்டம் கிராமப்புற, ஏழை விவாசயிகள் என அனைவருக்கும் பயனளிக்கும் விதமாக இருந்தது.

செயல்படாத வங்கி கணக்குகள்
நாடு முழுவதும் கோடிக்கணக்கான ஜன் தன் வங்கி கணக்குகள் உள்ள நிலையில், இவற்றில் செயல்படாத நிலையில் உள்ள வங்கி கணக்குகளை மூடுமாறு மத்திய நிதி அமைச்சகம் வங்கிகளை கேட்டுக்கொண்டதாக அண்மையில் தகவல் பரவியது. இது ஜன் தன் வங்கிக் கணக்கு வைத்து இருக்கும் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கணக்குகளை முடக்க அறிவுறுத்தல்
ஜன் தன் வங்கி கணக்குகளை பொறுத்தவரை பெரும்பாலும் அரசின் நலத்திட்டங்கள் மட்டுமே இதில் வரவு வைக்கப்படுகின்றன. இந்த வங்கி கணக்குகளில் சாதாரண சேவிங்ஸ் அக்கவுண்ட்களை போல பயன்படுத்த முடியாது. இத்தகைய சூழலில், பயன்பாட்டில் இல்லாத வங்கி கணக்குகளை முடக்குமாறு நிதி அமைச்சகம் அறிவுறுத்தியதாக தகவல் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
இந்த நிலையில், ஜன் தன் வங்கி கணக்குகள் மூடப்படும் என்று பரவிய தகவலை நிதி அமைச்சகம் மறுத்துள்ளது. இது தொடர்பாக நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பரிவர்த்தனை இல்லாத ஜன் தன் வங்கி கணக்குகளை மூடுமாறு வங்கிகளை கேட்டுக்கொண்டதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானவை.
எத்தனை கணக்குகள் செயல்படாமல் உள்ளன?
இதேபோன்ற கணக்குகளை மூடுவதற்காக வங்கிகளுக்கு எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. சொல்லப்போனால், ஜன் தன் வங்கி கணக்குகளை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த மூன்று மாதம் பிரசாரம் மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது.
இந்த பிரசாரத்தின் போது வங்கிகள் தனது ஜன் தன் கணக்கு வாடிக்கையாளர்களிடம் மீண்டும் ஒரு கே ஓய்சி பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜன் தன் வங்கி கணக்குகளில் எத்தனை கணக்குகள் செயல்படாமல் உள்ளன என்பதை நிதி சேவைகள் துறை உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஆக்டிவாக இல்லாத கணக்குகள் வைத்து இருக்கும் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு அக்கவுண்டை செயல்பாட்டில் வைக்க வலியுறுத்துமாறு வங்கிகளை அறிவுறுத்த கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜன் தன் வங்கி கணக்கு என்றால் என்ன?
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா என்பது மத்திய அரசுகொண்டு தனது குடிமக்களுக்கு கொண்டு வந்த திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு இல்லாத குடிமக்களை வங்கி கணக்கு தொடங்க வைப்பதே இதன் நோக்கம். இந்த வங்கி கணக்கிற்கு குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லை.
ரூபே டெபிட் கார்டு இந்த அக்கவுண்ட் ஹோல்டர்களுக்கு வழங்கப்படும். விபத்து காப்பீடு ரூ.1 லட்சம் ரூபே கார்டுடன் இணைத்து வழங்கப்பட்டுள்ளது. 2018 க்கு பிறகு கணக்குதொடங்கியிருந்தால் ரூ.2 லட்சம் விபத்து காப்பீடு ஆகும். ரூ. 10 ஆயிரம் வரை overdraft எடுத்துக்கொள்ள முடியும்.












Click it and Unblock the Notifications