ஏ.சி.சண்முகம் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக தலைமை.. தாமரை சின்னத்தில் போட்டியிட சீட் இல்லை!
சென்னை: பாஜக தங்களுக்கு ஒரு சீட் வழங்கும் என்றும், அதில் தாமரை சின்னத்தில் போட்டியிடுவோம் என்றும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் கூறிவந்த நிலையில் பாஜக வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் புதிய நீதிக் கட்சிக்கு சீட் ஒதுக்கப்படவில்லை.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக அக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்திருந்தார். அதிமுக, பாஜக சார்பில் தலா ஒரு தொகுதி புதிய நீதிக்கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும், இரட்டை இலை மற்றும் தாமரை சின்னங்களில் தலா ஒரு தொகுதியில் போட்டியிடுவோம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

புதிய நீதிக்கட்சிக்கு அதிமுக சார்பில் மதுரை மத்திய தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் வேட்பாளராக இயக்குநரும், நடிகருமான சுந்தர் சி-யை புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் அறிவித்தார். சுந்தர்.சி மதுரை மத்திய தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
தமிழக பாஜக துணை தலைவராக இருக்கும் நடிகை குஷ்புவின் கணவர் சுந்தர் சி முதல்முறையாக இவர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறார். மதுரை மத்திய தொகுதியில் திமுக வேட்பாளராக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
புதிய நீதிக்கட்சிக்கு பாஜக சார்பில் எந்த தொகுதி ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், பாஜகவுக்கு அதிமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று அறிவித்தது பாஜக தலைமை.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சாத்துர் தொகுதியிலும், அவிநாசி தொகுதியில் மத்திய இணையமைச்சர் எல். முருகன், மயிலாப்பூர் தொகுதியில் முன்னாள் ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன், கோவை வடக்கு தொகுதியில் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
பாஜக தங்களுக்கு ஒரு சீட் வழங்கும் என்றும், அதில் தாமரை சின்னத்தில் போட்டியிடுவோம் என்றும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் கூறிவந்த நிலையில் பாஜக இன்று வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் புதிய நீதிக் கட்சிக்கு சீட் ஒதுக்கப்படவில்லை.
கே.சி. திருமாறனின் தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒரு சீட் வழங்கியது பாஜக. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் கே.சி. திருமாறன் போட்டியிடுவார் என பாஜக இன்று அறிவித்துள்ளது. ஆனால், புதிய நீதிக்கட்சிக்கு சீட் வழங்கப்படவில்லை.
புதிய நீதிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட மதுரை மத்திய தொகுதியில், பாஜக நிர்வாகி குஷ்புவின் கணவர் சுந்தர்.சி போட்டியிடும் நிலையில், தற்போது புதிய நீதிக் கட்சிக்கு பாஜக சீட் ஒதுக்காதது அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications