ஹோட்டல்களுக்கு விதிக்கப்பட்ட அதிரடி கட்டுப்பாடு.. சாப்பிட போறீங்களா? முதலில் இதை படிங்க.. அரசு மாஸ்!
சென்னை: உணவகங்களில் புகைக்கும் அறை ( Smoking Room ) அமைப்பதற்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றி உள்ளது. இதற்கான அறிவிப்பு அரசிதழில் வெளியீடப்பட்டு உள்ளது.
பொதுவாக உணவகங்கள் சிலவற்றில் புகைக்கும் அறை என்று தனியாக இருக்கும். அதாவது புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் புகைக்க வசதியாக இந்த அறை ஏற்படுத்தப்பட்டு இருக்கும். சிலரால் சாப்பிடும் போது புகைபிடிக்காமல் இருக்க முடியாது. புகைத்துக்கொண்டே சாப்பிட வேண்டும் என்று நினைப்பார்கள். இதன் மூலம் புகை பிடிக்கும் விரும்பும் நபர்கள் தனியாக புகைக்கலாம்.

அதேபோல் புகைபிடிக்க விரும்பாத நபர்களுக்கும் இதனால் தொல்லை இருக்காது . தனியாக புகைக்க விரும்பும் நபர்கள் அறையில் இருப்பார்கள். மற்ற பொதுமக்கள் பொது அறையில் இருப்பார்கள். புகை, இருமல் போன்ற பிரச்சனைகள் இருக்காது. ஆனால் இது புகைபிடிப்பதை ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கை ஆகும். அதேபோல் மக்கள் தேவையின்றி இதனால் உடல்நலக்கேட்டிற்கு ஆளாக வாய்ப்பு உள்ளது. இப்போதெல்லாம் பல உணவகங்களில் இது போல புகைக்கும் அறைகள் கொண்டு வரப்பட்டு உள்ளன.
அதிக அளவில் கஸ்டமர்கள் வர வேண்டும் என்பதற்காக இது போல புகைக்கும் அறைகள் கொண்டு வரப்பட்டு உள்ளன. புகைபிடிக்கும் பழக்கம் காரணமாக தீ விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் கூட உள்ளன. இந்த நிலையில்தான் உணவகங்களில் புகைக்கும் அறை ( Smoking Room ) அமைப்பதற்கு தடை வி தித்து தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றி உள்ளது. இதற்கான அறிவிப்பு அரசிதழில் வெளியீடப்பட்டு உள்ளது.
அதன்படி உணவுக்கூடங்கள் உள்ளிட்ட எந்த இடத்திலும் புகைக்குழல் அறை திறக்க தடை விதித்து தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றிய நிலையில், தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
விதிகளை மீறி புகைக்குழல் கூடம் நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஓராண்டு முதல் 3 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை, ₹20,000 முதல் ₹50,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அரசாணை விவரம்: 44 புகைக்குழல் கூடத்தினை தடைசெய்தல்.- இந்தச் சட்டத்தில் அடங்கியிருப்பது எவ்வாறிருப்பினும், நபரெவரும், அவருக்குச் சொந்தமாகவோ அல்லது பிற நபர் எவரின் சார்பாகவோ, உணவுக் கூடம் உள்ளடங்கலான எந்த இடத்திலும், புகைக்குழல் கூடம் எதனையும் திறக்கவோ அல்வது நடத்தவோ அல்லது பயாடிக்கையாளர்களுக்கு புகைக்குழலினை வழங்கவோ கூடாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

விளக்கம்: "உணவுக்கூடம்" என்பது உணவு அல்லது சாராயம், மது, கோதுமைச்
சாராயம், பார்வி சாராயம் அல்லது பிற தானியவகையிலான மதுபானங்களை உள்ளடக்காதச் சிற்றுண்டி வகை எதனையும், சாதாரண வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றதும் நுகர்வுக்காக விற்கப்படுகின்றதுமான இடம் எதுவும் என்று பொருள்படும் என்று விளக்கமும் அளிக்கப்பட்டு உள்ளது.
கைப்பற்றுதலுக்கான அதிகாரம்: மாநில அரசினால் அதிகாரமளிக்கப்பட்ட, உதவி ஆய்வாளர் படிநிலைக்குக் குறையாத, காவல்துறை அலுவலர் எவரும், 4A ஆம் பிரிவின் அந்த வகைமுறைகளானவை மீறப்படுகிறது அல்லது மீறப்பட்டுள்ளது என நம்புவதற்கான காரணத்தைக் கொண்டிருந்தால், புகைக்குழல் கூடத்தின் உட்பொருளாகவோ அல்லது துணைப் பொருளாகவோ பயன்படுத்தப்பட்ட மூலப்பொருள் அல்லது பொருள் எதனையும் அவர் கைப்பற்றலாம், என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.,
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications