புதிதாக நியமிக்கப்படும் போது.. ஆசிரியர்களுக்கு 5 வருடங்கள் பணி இடமாற்றம் கிடையாது! பள்ளி கல்வித்துறை
சென்னை: அதிக காலிப்பணியிடங்கள் உள்ள முன்னுரிமை மாவட்டங்களில் புதிதாக நியமிக்கப்படும் ஆசிரியர்கள் 5 வருடங்கள் பணிபுரிய வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரையில் அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் இடங்களில் புதிய ஆசிரியர் நியமிக்கப்படும் போது இரண்டு ஆண்டுகள் அந்த பள்ளிகளில் பணியாற்ற வேண்டும். அவர்கள் இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய பிறகு வேறு பள்ளிகளுக்கு பணியிட மாறுதல் கேட்டு விண்ணப்பிக்கலாம்.

இதன் அடிப்படையில் அவர்களுக்கு பணியிட மாற்றத்திற்கான சீனியாரிட்டி பட்டியல்கள் வெளியிடப்பட்டு பணியிட மாற்ற கலந்தாய்வில் பங்கேற்று தேவையான இடங்களை தேர்வு செய்ய முடியும். இந்த நடைமுறைதான் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த நிலையில் ஆசிரியர்கள் நியமனத்தின் போது புதிய நடைமுறையை கடைபிடிக்க பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் போட்டித்தேர்வு மூலம் 2000 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் முடிந்த நிலையில், போட்டித்தேர்வு வரும் ஜனவரி 7-ந் தேதி நடைபெற இருக்கிறது. போட்டித்தேர்வு வாயிலாக தேர்வு செய்யப் பட்டு நியமிக்கப்படும் ஆசிரியர்களை பணியமர்த்தும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மற்றும் மேலும் சில உத்த ரவுகளை பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் ஜெ.குமரகுருபரன், பள்ளிக்கல்வி இயக்குனருக்கு தெரிவித்துள்ளார்.
அந்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:- 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் தேர்வாகும் தேர்வர்கள் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகமாக இருக்கும் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தர்மபுரி மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும்.
வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பணி நிரவல் நடைமுறை பின்பற்றப்பட்ட பிறகே ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அறிவுறுத்தல்களை தவறாது கடைப்பிடிக்க வேண்டும். இதனை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முன்னுரிமை மாவட்டங்களில் தேர்வர்களை நியமனம் செய்யும் போதே குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அந்தந்த மாவட்டங்களில் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனையை நியமன ஆனையில் குறிப்பிட்டு நியமனம் செய்ய வேண்டும். என்று கூறப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications