"இந்த ப்ரீஸ் டாஸ்க்கை யாரும் அடிச்சுக்க முடியாது".. நெட்டிசன்கள் போட்டு காட்டிய "குறும்படம்"
சென்னை: ஷிவானியின் ப்ரீஸ் டாஸ்க் புரோமோ வெளியான நிலையில் பிக்பாஸ் சீசன் 3இல் லாஸ்லியாவின் ப்ரீஸ் டாஸ்கை யாரும் அடிச்சிக்க முடியாது என நெட்டிசன்கள் நெகிழ்ந்து வருகிறார்கள்.
பிக்பாஸ் எனும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது சீசன் 4 வெளியாகிறது. இந்த நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி தொடங்கியது. 85 நாட்கள் உருண்டோடி விட்டன.
மொத்தம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி முடிவடைய இன்னும் 15 நாட்களே உள்ளன. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு டாஸ்க்கள் கொடுக்கப்படுகின்றன.

பாடல்
அந்த வகையில் 80 நாட்களுக்கு மேல் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று அவர்களது அன்புக்குரியவர்களை பார்க்க ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அந்த நேரத்தில் ஒரு பாடல் ஒலிக்கும். அப்போது அனைவரும் ப்ரீஸாக வேண்டும்.

பிக்பாஸ் ரிலீஸ்
அதாவது ஆடாமல் அசையாமல் இருக்க வேண்டும். பிக்பாஸ் ரிலீஸ் என சொன்னவுடன்தான் சம்பந்தப்பட்ட போட்டியாளர் தன்னுடைய குடும்பத்தாரை கட்டி அணைத்து அன்பை பொழிய வேண்டும். அந்த வகையில் நேற்று முதல் பிக்பாஸ் வீட்டில் ப்ரீஸ் டாஸ்க் தொடங்கியது.

ஷிவானி அழுகை
இதில் ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு.. எனும் பாடல் ஒலிக்கப்படுகிறது. அந்த சமயம் ஷிவானியின் தாய் உள்ளே வருகிறார். வழக்கம்போல் எந்த ரியாக்ஷனும் செய்ய தெரியாத ஷிவானி மூக்கை விரித்து விரித்து அழுவது போல் செய்கிறார். இவரை அழத் தெரியாத குழந்தை என்பதா, இல்லை எந்த ஒரு ரியாக்ஷனும் சரியாக வரவில்லை என்பதா தெரியவில்லை.

எமோஷன்
இந்த புரோமோவில் இந்த நிகழ்ச்சிக்கு எதற்காக வந்தாய் என அவரது தாய் கேட்கிறார், அதற்கு ஒன்றும் தெரியாதது போல் பார்க்கிறார் ஷிவானி. இந்த வீடியோவை நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். ஆனால் ஒரு சிலர் பிக்பாஸ் 3 சீசனில் ப்ரீஸ் டாஸ்கின் போது வெளிநாட்டிலிருந்து வந்த தந்தையை பார்த்த லாஸ்லியா கொடுத்த எமோஷனை விட சிறந்தது வேறு எதுவும் இல்லை என்கிறார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சி
லாஸ்லியாவின் தந்தை வெளிநாட்டில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் திடீரென இந்தியாவுக்கு வரும் மரியநேசனுக்கு தனது மகளை பார்க்கும் வாய்ப்பை பிக்பாஸ் நிகழ்ச்சி வழங்கியது. இதையடுத்து அவர், தனது மனைவி, இன்னொரு மகளுடன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார்.

மறக்கவில்லை
அப்போது ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் உறைநிலையில் நிற்கிறார்கள். லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் என்ட்ரி கொடுக்கிறார். நீண்ட நாட்களாக பார்க்காமல் இருந்த தனது தந்தையை பார்த்த லாஸ்லியாவின் எமோஷன்கள் அனைவர் நெஞ்சையும் பிசைவதாக இருந்தது. இந்த எமோஷனை ரசிகர்கள் யாரும் இன்னமும் மறக்கவில்லை.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications