வடகிழக்கு பருவமழையை சமாளிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார் - அமைச்சர் ஆர்.பி உதயகுமார்

தமிழகத்தில் இயல்பு நிலையை விட 40 சதவீதம் குறைவாக வடகிழக்கு பருவமழை இதுவரை பெய்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளாக 4,133 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன என்று அமைச்சர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இயல்பு நிலையை விட 40 சதவிகிதம் குறைவாக வடகிழக்கு பருவமழை இதுவரை பெய்துள்ளதாக அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார். சென்னையில் ஏரிகள் நிரம்பிய உடன் உபரி நீரை வெளியேற்ற முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 24 மணிநேரமும் ஏரிகள் கண்காணிக்கப்படுகின்றன. அனைத்து அதிகாரிகளும் தயாராக இருப்பதால் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

Recommended Video

    சென்னை: மீண்டும் வெள்ள அபாயத்தில் தலைநகரம்…? நிரம்பிய 14 ஏரிகள்… அடையாறில் வெள்ளப்பெருக்கு..!

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் ஏரிகள் பல நிரம்பி வழிகின்றன.இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

    North east monsoon Security arrangements ready to save people - Minister RB Udayakumar

    அப்போது பேசிய அவர், தமிழகத்தில் இயல்பு நிலையை விட 40 சதவிகிதம் குறைவாக வடகிழக்கு பருவமழை இதுவரை பெய்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளாக 4,133 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

    அதிக பாதிப்பிற்கு உள்ளாகும் பகுதிகளாக 297 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது. 36 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு மற்றும் அறிவுரைகளை வழங்கும் அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னையில் தண்ணீர் தேங்கும் பகுதிகள் அடையாளம் காணப்பட்டு நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஏரிகள் நிரம்பிய உடன் உபரி நீரை வெளியேற்ற முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 24 மணிநேரமும் ஏரிகள் கண்காணிக்கப்படுகின்றன. அனைத்து அதிகாரிகளும் தயாராக இருப்பதால் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என்றும் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+