வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படவில்லை.. வதந்தி பரப்பினால் 7 ஆண்டுகள் சிறை: டிஜிபி சைலேந்திர பாபு
வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.
சென்னை: தமிழ்நாட்டில் வட மாநிலத்தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்றும் டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார். வதந்தி பரப்பியவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் டிஜிபி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வீடியோக்கள் வெளியாகி வருகின்றனர். தமிழ்நாட்டில் இருந்து கூட்டம் கூட்டமாக வட மாநில தொழிலாளர்கள் வெளியேறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதனிடையே வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கூறப்படுவது வதந்தி என்றும், அதை நம்பவேண்டாம் என்றும் காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர். இதுதொடர்பான வீடியோக்களும் போலி என்று தமிழக போலீஸ் கூறியிருக்கிறது. இதனிடையே வடமாநில தொழிலாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வடமாநில தொழிலாளர்கள் புரிந்து கொள்ளும் வகையில் இந்தியில் அறிவிப்புகளை தமிழக காவல்துறை தனது இணைய தளத்தில் வெளியிட்டு உள்ளது.
இந்த நிலையில், வதந்தி பரப்புவோரை பிடிக்க டிஜிபி உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் யார் வதந்தி பரப்புகிறார்கள் என போலீசார் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து தற்போது வதந்தி பரப்பியதாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. திருப்பூரில் 2 பேர் மற்றும் தூத்துக்குடியில் ஒருவர் என மொத்தம் 3 பேர் மீது தமிழக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்கள் மூவரும் தற்போது தலைமறைவாகி உள்ளதாகவும், அவர்களை பிடிக்கும் பணியானது தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், வடமாநில தொழிலாளர்கள் தொடர்பாக அவதூறு பரப்புவோரின் பட்டியல் தயார்செய்யப்பட்டு வருகிறது என்றும், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமாநில தொழிலாளர்களின் அச்சத்தை போக்கும் வகையில் மாநகர காவல்துறை நடவடிக்கை எடுத்துவருவதாக வடமாநில தொழிலாளர்களை சந்தித்த பிறகு திருப்பூர் காவல் ஆணையர் பிரவீன்குமார் அபினபு கூறியுள்ளார். திருப்பூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனி உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த டிஜிபி சைலேந்திரபாபு, வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புபவர்கள் கைது செய்யப்பட்டு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கூறினார். வட மாநிலத் தொழிலாளர்கள் பாதுகாப்புடன் உள்ளதாகவும் அவர்கள் அச்சத்துடன் சொந்த ஊருக்கு செல்லவில்லை என்றும் கூறினார்.
7ஆம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பண்டிகையை கொண்டாட வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர் என்றும் கூறினார். வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் டிஜிபி சைலேந்திரபாபு கூறினார்.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications