நாளை மாலை சென்னையில் மிதமான மழை.. நார்வே வானிலை மையம் சொன்ன நற்செய்தி
சென்னை: வங்கக் கடலில் 23 ஆம் தேதி காற்றழுத்தம் உருவாகவுள்ள நிலையில் சென்னையில் நாளை மாலை மழை பெய்யும் என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை வரும் 23 ஆம் தேதி உருவாகிறது. இது புயலாக மாறக் கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஒரு வேளை புயலாக மாறினால் இதற்கு யாஸ் என பெயரிடப்படவுள்ளது. யாஸ் என ஓமன் நாடு பெயரிட்டுள்ளது. இந்த நிலையில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவதற்கு முன்னதாக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யும் என வெதர்மேன் தெரிவித்திருந்தார்.

நார்வே வானிலை மையம்
இந்த நிலையில் நார்வே வானிலை மையம் சென்னை நாளை மாலை மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மாலை மிதமான மழை பெய்யும். அது போல் 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலையும் மாலையும் மிதமான மழை பெய்யும்.

இரவு நேரம்
பின்னர் சனிக்கிழமை மாலையும் இரவு நேரங்களிலும் லேசான மழை பெய்யும். மே 25-ஆம் தேதி காலையும் லேசான மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 27-ஆம் தேதி வியாழக்கிழமை அன்று வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸாக உயரும் என

எந்த மாவட்டங்கள்
23-ஆம் தேதி குறைந்த காற்றழுத்தம் உருவாக உள்ள நிலையில் 18-ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை தமிழகத்தில் காஞ்சிபுரம், ஆம்பூர், திருவண்ணாமலை, ஆத்தூர், விருத்தாசலம், திருச்சி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை இருக்கும்.

திருப்பதி
அது போல் ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதியில் 18 முதல் 23 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் கோவை வெப்பத்தால் அவதியுறும் மக்களுக்கு இந்த லேசான மழை சிறிது மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications