திட்டமிட்டு அசிங்கப்படுத்த முயல்கிறார்கள்.. கைதுக்கு அஞ்சும் ஆள் நான் இல்லை.. ஆவேசமான சீமான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்றைய தினம் சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்ட நிலையில், அது பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ள சீமான், தன்னை திட்டமிட்டு அவமானப்படுத்தவே சம்மனை கதவில் ஒட்டி சென்றுள்ளனர் என்றும் கைதுக்குப் பயப்படும் ஆள் தான் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை ஒருவர் பாலியல் பலாத்கார புகார் அளித்திருந்தார். அது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி, 12 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Seeman Vijayalakshmi NTK

சீமான்

அதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ள போலீசார், நேற்று சீமானுக்கு சம்மன் அனுப்ப அவரது வீட்டிற்குச் சென்றனர். போலீசார் சம்மனை கதவில் ஒட்டி சென்ற நிலையில், அதைச் சிறிது நேரத்தில் அவரது உதவியாளர் கிழித்தார். இதனால் அங்கு போலீசாருக்கும் சீமான் காவலாளிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து சீமான் காவலாளி அமல்ராஜ் மற்றும் உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.

கைதுக்கு அஞ்ச மாட்டோம்

இதற்கிடையே இன்று சேலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த சீமான், போலீஸ் விசாரணைக்கு ஆஜராக விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். தொடர்ந்து விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் சம்மன் கிழிக்கப்பட்ட விவகாரம் குறித்து விளக்கமளித்தார். சம்மனை கதவில் ஒட்டியது அநாகரிகமான விஷயம் என்ற சீமான், தன்னை திட்டமிட்டு அவமானப்படுத்தவே சம்மனை கதவில் ஒட்டி சென்றுள்ளனர் என்றும் தெரிவித்தார். மேலும், சம்மனை வைத்து சாமி கும்பிடவா முடியும் என்றும் கைதுக்குப் பயப்படும் ஆள் நான் இல்லை சீமான் ஆவேசமாகக் கூறினார்.

அந்த பெண் கொடுத்த புகாரில் முகாந்திரம் இல்லாததால் எடப்பாடி காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் திமுக ஆட்சிக்கு வரும்போது மட்டுமே இதுபோன்ற புகார் தன் மீது வருவதாகவும் சீமான் தெரிவித்தார்.

அதிமுக ஆட்சியில் என்ன நடந்தது

அவர் மேலும் கூறுகையில், "வீரனை வீரத்தால் எதிர்கொள்ள வேண்டும். ஆனால், இவர்கள் கோழையைப் போலப் பெண்களுக்குப் பின்னால் நின்று கொள்கிறார்கள். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது தான் முதலில் இந்த புகார் வந்தது. அப்போது விசாரித்த போது உண்மை இல்லை என்பதால் நடவடிக்கை இல்லை. எடப்பாடி முதல்வராக இருந்த போதும் எதுவும் பேசவில்லை. திமுக வந்த பிறகு மீண்டும் எடுக்கிறார்கள்.

ஏன் இவ்வளவு அவசரம் எனக் கேட்டால் சட்டம் கடமையை செய்வதாகச் சொல்கிறார்கள். அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் சட்டம் தனது கடமையைச் செய்ததா.. கள்ளச்சாராய வழக்கில் சட்டம் தனது கடமையைச் செய்ததா.. 90 நாட்கள் உள்ளே இருந்து வெளியே வந்து மீண்டும் கள்ளச்சாராயம் காய்ச்சுகிறான்.

சட்டம் தனது கடமையைச் செய்ததா?

பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது.. மன ரீதியாகப் பாதிக்கப்பட்ட பெண்ணை கூட பலரும் பலாத்காரம் செய்தனர். அப்போது சட்டம் தனது கடமையைச் செய்ததா.. பொள்ளாச்சி சம்பவம், போதைப் பொருள் விற்பனை தொடர்ந்து பல சம்பவங்களைச் சொல்லலாம்.. அப்போதெல்லாம் சட்டம் என்ன செய்தது.

15 ஆண்டுகளாக ஒரு பெண்ணை வைத்து எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் சிக்கலைத் தருகிறீர்கள். இந்த வழக்கை முடிக்க வேண்டும் என முதலில் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டதே நாங்கள் தான்.. கைதுக்குப் பயப்படும் ஆள் நான் இல்லை.. முதலில் 2011ல் புகார் அளித்த போதும் சரி, அதன் பிறகு புகார் அளித்த போதும் சரி திருமணமாகிவிட்டதாகவும் சொல்லவில்லை. கருக்கலைப்பு செய்ததாகவும் சொல்லவில்லை. திடீரென வந்து இதுபோல சொல்வதை ஏற்க முடியுமா?" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+