திமுகவை திணறடிக்க திட்டம் போடும் சிபிஐ.. பாஜக மெகா பிளான்.. மிகப்பெரிய அரசியல் ட்விஸ்ட் வருது
சென்னை: கரூர் துயர சம்பவத்தில் திமுகவை நேரடியாக உள்ளிழுக்காவிட்டாலும், மறைமுகமாக குடைச்சல் கொடுக்க சிபிஐ மூலம் பாஜக திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதை திமுக எப்படி முறியடிக்கப் போகிறது என்பது தான் டுவிஸ்டே...
திமுகவை கட்சி வேலை பார்க்க விடாமல் கொங்கு மண்டல திமுககாரர்களுக்கு நெருக்கடி கொடுத்து, அதன் மூலம் கொங்கு மண்டலத்தில் என்டிஏ கூட்டணியின் வெற்றியை எளிதாக்க சிபிஐ மூலம் பாஜக திட்டம் போடுவதாகவும் கூறப்படுகிறது. இதற்காக பெரிய பிளான் களமிறக்கப்பட்டு உள்ளதாம்.

கரூரில், கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜயின் பிரச்சார கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பரதாபமாக உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற உத்தரவின் படி சிபிஐ விசாரித்து வருகிறது. கரூரில் கள விசாரணை, பாதிக்கப்பட்டவர்கள், சம்பவத்தின்போது உடனிருந்தவர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் மருத்துவத்துறையினர், பொதுமக்கள் என பல கட்ட விசாரணைகளுக்குப் பிறகு தற்போது கோர் விசாரணையை தொடங்கியுள்ளது சிபிஐ.
தவெக சிபிஐ விசாரணை
தவெக நிர்வாகிகளிடம் தொடங்கிய விசாரணையின் அடுத்த கட்டமாக விஜயிடம் சிபிஐ அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை மூன்று முறை விஜய் சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில்(டெல்லியில்) விசாரணைக்கு ஆஜராகியுள்ளார் இன்னும் விசாரணை நடைபெறும் என்கிறார்கள். அடுத்த கட்டமாக கரூர் தொகுதி எம்எல்ஏ செந்தில் பாலாஜியிடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது.
சம்பவம் நடந்த உடனேயே இது சதி என்றும், இதற்கு காரணம் செந்தில் பாலாஜி தான் என்றும் தவெக குற்றம் சாட்டியது. அப்போதெல்லாம் செந்தில் பாலாஜியை கண்டு கொள்ளாத சிபிஐ, சம்பவம் நடைபெற்று கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் கழித்து இப்போது செந்தில் பாலாஜியை விசாரணைக்கு அழைத்திருப்பது ஏன் என்பது தான் பலரின் கேள்வியாக உள்ளது.
செந்தில் பாலாஜிக்கு நெருக்கடி
தேர்தல் நெருங்கும் சமயத்தில் கட்சி வேலைகளை பார்க்க விடாமல் செந்தில் பாலாஜிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என பாஜக சிபிஐ மூலம் திட்டம் போடுகிறதோ என்றும் சிலர் சந்தேகத்தை முன்வைக்கிறார்கள். செந்தில் பாலாஜி பார்க்காத விசாரணைகளா?... தவெகவை கன்வின்ஸ் செய்வதற்காகத் தான் செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது என டைவர்ட் பாலிடிக்ஸ் பேசுபவர்களும் இருக்கிறார்கள். ஆனாலும், செந்தில் பாலாஜி கெத்தாக விசாரணைக்கு ஆஜராகிவிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், மீண்டும் மீண்டும் செந்தில் பாலாஜியை சிபிஐ விசாரணைக்கு அழைக்கலாம் என அடித்துச் சொல்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். அது மட்டுமில்லையாம், சம்பவம் நடைபெற்ற போது செந்தில் பாலாஜியோடு மருத்துவமனைக்கு சென்ற விஐபிகள், சம்பவம் குறித்தும், பிறகு வழக்கு விசாரணை குறித்தும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்திய அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி செய்த அரசியல் கட்சி மற்றும் தொண்டு நிறுவனங்கள் என பலரையும் விசாரணைக்கு அழைக்க சிபிஐ திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது கட்சி வேலை பார்க்க விடாமல் கொங்கு மண்டல திமுககாரர்களுக்கு நெருக்கடி கொடுத்து, அதன் மூலம் கொங்கு மண்டலத்தில் என்டிஏ கூட்டணியின் வெற்றியை எளிதாக்க சிபிஐ மூலம் பாஜக திட்டம் போடுவதாகவும் கூறப்படுகிறது. சிபிஐயின் இந்த நெருக்கடியை கொங்குமண்டல திமுக எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதை தான் இப்போது அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.
- சிறப்பு நிருபர்
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications