இந்தி திணிப்பு.. அவ்வளவு ரோஷமிருந்தால் எங்கிட்ட ஏன் வரி வாங்குற.. கொந்தளித்த சீமான்!
தேசியக் கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி அளிக்கப்படாது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பாஜக தரப்பில் மும்மொழி கொள்கை அவசியம் குறித்து பேசப்பட்டு வரும் நிலையில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இருமொழிக் கொள்கையே தொடரும் என்றும், இந்தித் திணிப்பை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் அவினாசியில் நாம் தமிழர் கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் சீமான் பங்கேற்றார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து சீமான் பேசும் போது, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சீமான், இந்தியா ஒரு தேசியம் அல்ல. அது பல தேசியங்களின் ஒன்றியம்.

பல மொழி பேசும் மக்களும், பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்களும் வாழும் நாட்டில் ஒவ்வொரு மொழிக்கும், கலை, பண்பாடு, வழிபாடு, கலாச்சாரம் வெவ்வேறாக இருக்கும். அனைத்து மக்களின் மொழிக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். மும்மொழி கொள்கையில் என்ன இருக்கிறது? புதியக் கல்விக் கொள்கையில் கட்டாயம் இந்தி மொழியை கற்க சொல்கிறது.
கெடுவாய்ப்பாக வெள்ளைக்காரன் இந்தியாவை ஆண்டுவிட்டான். அதனால் தொடர்பு மொழியாக ஆங்கிலம் இருக்கிறது. விரும்பினால் உலக மொழியை கற்கலாம். இந்தியை தாய் மொழியாக கொண்ட மாநிலங்களில் தமிழையும் சேர்த்து கொள்வார்களா? விரும்பினால் இந்தியை கற்றுக் கொள்வோம். மொழி என்பது குறுகிய காலத்தில் கற்றுக் கொள்ள முடியும். அதற்கு தாய் மொழியில் புலமை இருக்க வேண்டும்.
எந்தவொரு தேசிய இனத்திற்கும் கொள்கை மொழியாக ஒரு மொழிதான் இருக்கும். கட்டாயமாக இந்தி படி என்றால், வேறு மாதிரி நடக்கும். பல மொழிகள் இருப்பதால் தான் இந்தியா ஒரே நாடாக இருக்கிறது. ஒரே மொழி இருந்தால், புதிதாக பல நாடுகள் பிறக்கும். அதனை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. இந்தியை கட்டாயம் கற்க வேண்டுமென்றால் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.
இந்தியாவில் 22 மொழிகள் ஆட்சி மொழியாக இருந்தால் என்ன? வரி மட்டும் பெற்றுக் கொள்கின்றனர். ஆனால் கடிதம் அனுப்பும் போது மட்டும் இந்தியில் அனுப்புகிறார்கள். அவ்வளவு ரோஷம் இருந்தால், தமிழ்நாட்டின் வரியை ஏன் பெறுகிறீர்கள்? அதனால் கட்டாயம் இந்தியை படிக்க வேண்டும் என்பது கொஞ்சம் கூட சரியான விஷயமல்ல என்று தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications