“அவன் சினிமா பைட்டர்.. நான் ரியல் பைட்டர்! ஒரு கிக் போட்டேன்.. எங்க விழுந்தாரோ தெரில!” சீமான் பேச்சு
பள்ளி படிக்கும் போது தான் போட்ட சண்டை குறித்து சீமான் பகிர்ந்து கொண்டுள்ளார்.
சென்னை: சென்னை அடுத்துள்ள பூந்தமல்லியில் நடந்த நாம் தமிழர் கட்சியின் வீரக்கலைப் பாசறை நிகழ்ச்சியில் பேசிய சீமான் தனது பள்ளி கால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் இப்போது இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த இடைத்தேர்தலில் திமுக, அதிமுக கட்சிகளுடன் வழக்கம் போல நாம் தமிழரும் தனித்துக் களமிறங்குகிறது.
நாம் தமிழர் கட்சியில் இருந்து இந்தத் தேர்தலில் மேனகா போட்டியிடுகிறார். அவர் அங்குத் தீவிரமாகப் பிரசாரம் செய்து வருகிறார். இது ஒரு புறம் இருக்க நாம் தமிழர் கட்சியின் சார்பில் சென்னையில் கராத்தே உள்ளிட்ட கலைகளை கற்றுத் தரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நாம் தமிழர் சீமான்
சென்னை அடுத்துள்ள பூந்தமல்லியில் நடந்த நாம் தமிழர் கட்சியின் வீரக்கலைப் பாசறை நிகழ்ச்சியில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "நான் வீரக்கலையை கற்கும் போது.. எனது கிராமத்தில் வேறு யாரும் என்னுடன் கற்கவில்லை. நான் மட்டுமே தனியாகச் சென்று கற்றேன். அப்போது ஊரே என்னைப் பார்த்துச் சிரிப்பார்கள். இருப்பினும், எனது அப்பா அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் என்னை ஊக்குவித்தார்.

பள்ளி காலம்
அப்போது ஒருவர் என்னிடம் வந்து.. என்ன பெரிய கராத்தே .. நான் கல்லெடுத்து எறிந்தால் என்ன செய்வே என்று நக்கலாக கேட்டார். நான் யோசிக்காமல். உடனே நானும் கல்லெடுத்து எறிவேன் என்று சொல்லி பதிலடி கொடுத்தேன் அதுபோலத் தான் இன்னொரு சம்பவம்.. அப்போது நான் +2 படித்துக் கொண்டிருந்தேன். ஒருவர் என்னை அசிங்கப்படுத்தும் வகையில் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

ஒரு கிக் போட்டேன்
என்னால் தாங்கவே முடியவில்லை.. ஒரே ஒரு கிக் போட்டேன்.. அவர் எங்குப் போய் விழுந்தார் என்றே தெரியவில்லை.. ஆனால், அதன் பிறகு ஒரு மாதம் நானே அவரை மருத்துவமனைக்குத் தினசரி அழைத்துச் சென்று கொண்டிருந்தேன். அது எனக்குத் தண்டனையாகிவிட்டது. அன்றில் இருந்து யாரையும் நான் அடிப்பதே இல்லை.. அடித்து எதாவது பிரச்சினை ஆகிவிடுமோ என்று அடிக்க மாட்டேன்

நான் ரியல் லைப் பைட்டர்
மற்றொவருன் சாலையில் நமது தம்பி ஒருவருடன் சண்டை போட்டுள்ளார். அவர்கள் காசு கேட்கவே.. வாங்க எங்க அண்ணனிடம் இருந்து வாங்கி தரேன் என்று சொல்லிக் கூட்டி வந்தார்கள்.. நான் தான் எனச் சொல்லாமல் கூட்டி வந்தான். அவர்களும் 5,6 பேர் ரவுடி போல வந்து சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்கள். நான் அங்குப் போய் பார்த்தேன்.. ஒருவன் நான் யார் தெரியுமா.. சினிமாவில் பைட்டர் என்றார்.. நீ சினிமாவுல தான் பைட்டர் நான் ரியல் பைட்டர் என்று சொல்லிப் போட்டேன் இரண்டு.. அத்துடன் அவன் எங்குப் போனான் என்றே தெரியவில்லை.

தற்காப்பு கலை முக்கியம்
இதுபோல நமக்கு ஒரு கலை தெரிந்திருக்க வேண்டும். அப்போது தான் யார் வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற தன்னம்பிக்கை நமக்கு கிடைக்கும். தெருவில் யாராவது சத்தம் போட்டால்.. துணிந்து கேட்க உடம்பில் வலுவும் திமிறும் இருக்க வேண்டும். 10 பேர் வந்தாலும் அடிக்க துணிச்சல் வேண்டும். எப்படித் தடுக்க வேண்டும் எப்படி பதிலடி தர வேண்டும் என்பதைத் தெரிந்திருக்க வேண்டும்.

குட்டி கதை
ஒரு கதை சொல்கிறேன். மூன்று மாஸ்டர்கள் தங்கள் சண்டை ஸ்டைல் குறித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். உங்கள் ஸ்டைலின் சிறப்பு என்ன எனச் சண்டையின் சிறப்பு குறித்துக் கேட்டதற்கு.. முதலாவது மாஸ்டர்.. அவன் அடிக்க கை ஓங்கினால்.. அதைத் தடுத்த மறுநொடி அடித்துவிடுவேன் என்றார்.. இரண்டாவது மாஸ்டர் தடுப்பதே அடியாகக் கொடுத்துவிடுவேன் என்றார்.. இதைக் கேட்டுக் கொண்டிருந்த மூன்றாவது மாஸ்டர் சிரித்துக் கொண்டே.. அவன் அடிக்க வேண்டும் என்று நினைத்தாலே நாம் அடித்துவிட வேண்டும் என்றார்.

காத்திருக்கக் கூடாது
அப்படிதான் சண்டை என்று போய்விட்டால்.. அவன் அடிக்கும் வரை காத்திருக்கக் கூடாது.. எதிராளி நம்மை அடிக்க வேண்டும் என்று நினைத்தாலே அடித்து விட வேண்டும். இதில் கவனம் ரொம்ப முக்கியம்.. சண்டையில் ஏமாற்றுவதும் முக்கியம். ஒரு பக்கம் தாக்குவது போல மற்றொரு இடத்தில் குத்துவிடுவதும் ஒரு கலை தான். தற்காப்புக் கலையை கற்றால் தான் நமக்கே ஒரு தன்னம்பிக்கை வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்
-
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications