சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நிம்மதி இல்லை என புலம்பிய ரஜினி! "சிந்தனை தவறாக இருந்தால் நிம்மதி எப்படி வரும்!" சீமான் தாக்கு

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் ரஜினிகாந்த்தின் கருத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நாம் தமிழர் சீமான் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்மையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டத்தில் பாக்கெட்டுக்களில் அடைக்கப்பட்ட அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதித்தது.

ஏற்கனவே விலைவாசி தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

எங்க ஊரில் எப்படி பறை அடிப்பீங்க? சீமான் செய்யாறு பொதுக்கூட்ட எதிர்ப்புக்கு காரணமே இதுதான்! எங்க ஊரில் எப்படி பறை அடிப்பீங்க? சீமான் செய்யாறு பொதுக்கூட்ட எதிர்ப்புக்கு காரணமே இதுதான்!

ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி

பாக்கெட்டுக்களில் அடைக்கப்பட்ட அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி தொகையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதை பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகிறது. இதனிடையே அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை அம்பத்தூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

போராட்டம்

போராட்டம்

அதேபோல தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் உயர்த்தப்படுவதாகவும் சமீபத்தில் மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தார். மத்திய அரசின் வலியுறுத்தல் காரணமாகவே கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதாகவும் அடித்தட்டு மக்களைப் பாதிக்காத வகையில் விலை உயர்த்தப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்து இருந்தார். இதைக் கண்டித்தும் நாம் தமிழர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சாடல்

சாடல்

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி வரிகளை உயர்த்துவதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது. அரசின் வருவாயை உயர்த்தி மக்களுக்குத் தேவையான திட்டங்களை முன்னெடுப்பதில் கவனம் செலுத்துவதில்லை. மின் கட்டண உயர்வு விவகாரத்திலும் கூட திமுகவும் பாஜகவும் தொடர்ந்து ஒருவரையொருவர் குற்றம்சாட்டி நாடகம் ஆடியே வருகின்றன" என்றார்.

Recommended Video

    ’’சர்வாதிகாரிதான் நேர்மையானவன்’’ - சர்வாதிகாரத்திற்கு விளக்கம் சொன்ன Seeman
    ரஜினி

    ரஜினி

    சமீபத்தில் நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், சாதியையும், அறிவையும் இணைத்துப் பேசியது குறித்த கேள்விக்குப் பதில் அளித்த சீமான், "இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. அதே நிகழ்ச்சியில் பணம், புகழ், பெயர் இருந்தும் தனக்கு 10 சதவீதம்கூட நிம்மதி இல்லை என்று ரஜினிகாந்த் பேசி இருந்தார். சிந்தனை இந்தளவுக்குத் தவறாக இருந்தால் மன நிம்மதி எப்படிக் கிடைக்கும்" என்று கடுமையான கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.

    English summary
    NTK chief Seeman about raising electricity rate: (நுங்கம்பாக்கம் நிகழ்ச்சி குறித்து நாம் தமிழர் சீமான்) NTK Seeman's latest protest in chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X