காரைக்குடி தொகுதி.. டெபாசிட் இழந்து சீமான் தோல்வி.. தவெக வேட்பாளர் பிரபு வெற்றி!
சென்னை: காரைக்குடி தொகுதியில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் டெபாசிட் இழந்து தோல்வி அடைந்துள்ளார். தவெக வேட்பாளர் பிரபுவிடம் சுமார் 42 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சீமான் தோல்வி அடைந்துள்ளார். இது நாதகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு சாமானிய மக்களிடையே அதிகரித்துள்ளது. இம்முறை சட்டசபை செல்ல வேண்டும் என்பதில் சீமான் தீவிர முனைப்பு காட்டினார். தற்போது தபால் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கி உள்ளது. காரைக்குடி தொகுதியின் நொடிக்கு நொடி நிலவரம் தொடர்பாக தொடர்ந்து பார்க்கலாம்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்றது. மொத்தமாக 85.10% வாக்குகள் பதிவாகின. இதில் பதிவான வாக்குகள் இன்னும் சற்று நேரத்தில் எண்ணப்பட உள்ளது. இந்த தேர்தலில் அதிகம் எதிர்பார்க்கப்படும் தொகுதிகளில் ஒன்றாக காரைக்குடி தொகுதி மாறி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் களமிறங்கி இருக்கிறார்.

சீமான் மட்டுமல்லாமல் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் சிட்டிங் எம்எல்ஏ மாங்குடி, அதிமுக கூட்டணி சார்பாக அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி, தவெக சார்பாக பிரபு ஆகியோர் களத்தில் இருக்கின்றனர். இந்த தொகுதியில் சுமார் 75% வாக்குகள் பதிவாகியது. 4 வேட்பாளர்களும் வலிமையானவர்கள் என்பதால், வெற்றி தோல்வி இடையிலான வாக்குகள் வித்தியாசம் சொற்பமான அளவில் இருக்கும் என்று கருதப்படுகிறது. தற்போது தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கி இருக்கிறது.
இந்த நிலையில் சீமான் வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவை சந்தித்து வருகிறார். குறிப்பாக தவெக வேட்பாளர் பிரபிவை விடவும் சீமான் குறைவான வாக்குகளை பெற்றுள்ளார். இது நாதகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தொடர்ந்து தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, முதல் சுற்று வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டுள்ளது. இதன் முடிவில் தவெக வேட்பாளர் பிரபு 5,462 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். சீமான் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏ மாங்குடி இருவரும் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
தற்போது 11.30 மணி நிலவரப்படி தவெக வேட்பாளர் பிரபு 25,961 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாங்குடி 15,567 வாக்குகள் பெற்று 2வது இடத்திலும், அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி கடைசி இடத்திலும் உள்ளனர். சீமான் 3வது இடத்தில் இருந்தார்.
தற்போது வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில், சீமான் டெபாசி இழந்து தோல்வி அடைந்துள்ளார். சீமான் மொத்தமாகவே 17,926 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். அதேபோல் தவெக வேட்பாளர் சுமார் 42 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications