"அடுத்து நம்ம தான்".. தொண்டர்களுக்கு சீமான் மெசேஜ்.. உற்சாகத்தில் நாம் தமிழர்
சென்னை: சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என்று நான்கு முனை போட்டி நிலவியது. இதில் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. திமுக எதிர்க்கட்சியாகியுள்ளது. அதிமுக மூன்றாவது இடத்தையும், நாம் தமிழர் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளனர். நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி பெருமளவுக்கு சரிந்துள்ளது. இதனால் நாம் தமிழர் கட்சியினர் வருத்தத்தில் உள்ளனர். இந்நிலையில் சீமான் கொடுத்துள்ள உற்சாக மெசேஜ் அவர்களுக்கு பெரிய ஆறுதலை வழங்கியுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் தவெக ஆட்சி அமைப்பதற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியை பிடித்துள்ளது. மேலும் அதிமுகவில் வேலுமணி அணி மற்றும் அமமுக எம்எல்ஏ காமராஜ் ஆகியோர் தவெகவுக்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ளனர். முதலமைச்சர் விஜய் பதவியேற்றதும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார்.

நாம் தமிழர் பின்னடைவு
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி, அதிமுக வேலுமணி, சி.வி. சண்முகம் அணி, திக தலைவர் வீரமணி ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார். நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானையும் விஜய் சந்தித்து பேசினார். இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி படுதோல்வியடைந்துள்ளது. போட்டியிட்ட 234 தொகுகளிலும் நாம் தமிழர் வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.
கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தல் வரை நாம் தமிழர் கட்சிக்கு 8 சதவீதம் வாக்கு வங்கி இருந்தது. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி 4 சதவீதமாக சரிந்துள்ளது. பல வருடங்களாக கடினமாக உழைத்து, தனித்து போட்டியிட்டு நாம் தமிழர் இந்த வாக்கு வங்கியை உருவாக்கியது. தற்போதைய தோல்வி நாம் தமிழர் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
சீமான் மெசேஜ்
நாம் தமிழர் தொண்டர்களுக்கு சீமான் வெளியிட்டுள்ள ஆடியோவில், "கவலைப்பட வேண்டாம். இன்றைக்கு இல்லை என்றால் நாளைக்கு வெற்றி பெறுவோம். 5 வருடங்களில் களத்தை விட்டு வெளியேற கூடாது. 5 வருடங்கள் மக்களுடன் மக்களாக நிற்க வேண்டும். திரைக்கவர்ச்சியில் மக்கள் ஏமாந்துவிட்டார்கள். அவரை ஆட்சியில் அமர வைக்க நினைத்தனர். இப்போது அவரின் ஆட்சியை மக்கள் பார்த்துவிட்டார்கள். அடுத்து நமக்கு தான் வாய்ப்பு. தைரியமாக இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications