மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்.. விடாப்பிடியாக நிற்கும் செவிலியர்கள்! தமிழக அரசு முக்கிய மூவ்
சென்னை: பணி நிரந்தரம், உரிய ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் தற்போது கூடுவாஞ்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் காலிப் பணியிடங்கள் குறித்து டிச. 22 தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க மருத்துவக் கல்லூரி இயக்ககம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இயக்ககத்துக்கு மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் சித்ரா கடிதம் அனுப்பியிருக்கிறார்.

கோரிக்கைகள் என்ன?
- தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்
- தொகுப்பூதிய செவிலியர்களுக்கு பிரசவ விடுப்பு
- நீதிமன்ற உத்தரவுபடி MRP தொகுப்பூதிய செவிலியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும்
- செவிலியர் கண்காணிப்பாளர் நிலை 3 பணி இடங்களை மீண்டும் உருவாக்க வேண்டும்
- நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப செவிலியர்களின் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்
- கொரோனா பெருந்தொற்று காலத்தில் வேலை செய்து, பின்னர் வேலையை விட்டு நீக்கப்பட்டவர்களுக்கு வேலை வழங்க வேண்டும்
- திமுக தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்
செவிலியர்களின் போராட்டம்
இப்படி பல்வேறு கோரிக்கைகளை வைத்து செவிலியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் இன்று நேற்று நடப்பது கிடையாது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த காலத்திலிருந்து தொடர்ந்து வருகிறது. தற்போது இந்த போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. நேற்று முன்தினம் சென்னையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை செவிலியர்கள் நடத்தினர். போராட்டக்குழுவின் தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், சுகாதாரத்துறை செயலரின் அணுகுமுறை சரியில்லை என்று செவிலியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அமைச்சர் சொல்வதென்ன?
இதனையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரடியாக இந்த விஷயத்தில் தலையிட்டிருந்தார். போராட்டம் குறித்து நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
"செவிலியர் பணிக்கு தற்போது காலிப்பணியிடங்களே இல்லாத நிலை இருக்கிறது. ஒப்பந்த பணியாளர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் பணி வழங்கப்பட்டு வருகிறது. இன்று போராட்டம் நடத்துபவர்கள் இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு புதியதாக வேலைக்கு வந்தவர்கள் கிடையாது. இவர்களை பணிபுரியாமல் தவிர்க்க வேண்டும் என்கிற நோக்கம் அரசுக்கு கொஞ்சமும் இல்லை. போராட்டம் நடத்துவது செவிலியர்களின் ஜனநாயக உரிமைதான். அதை தவறு சொல்ல முடியாது. ஆனால், அதற்கான விதிமுறைகளை தெரிந்துக்கொள்ள வேண்டும்.
விதிமுறைகள் என்ன?
வேலைக்கு சேர்ந்தபோதே, அவர்களது நியமன ஆணையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பணி நிரந்தரம் கோர முடியாது என்றும், காலிப்பணியிடங்கள் உருவாகும்போது சீனியாரிட்டி அடிப்படையில் அவர்களுக்கு நிரந்தர பணி வழங்கப்படும் என்றும் ஆணையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு 3,783 செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த 8-9 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் இருப்பவர்களுக்கு வழங்கப்பட்டது.
ஆண்டு வாரியாக பார்த்தால்,
- 2021 - 251 பணியிடங்கள்
- 2022 - 678 பணியிடங்கள்
- 2024 - 1,694 பணியிடங்கள்
- 2025 502 பணியிடங்கள்
உருவாக்கப்பட்டு நிரந்தர பணி வழங்கப்பட்டது. தற்போது 169 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு தேர்வு செய்யப்பட்ட 169 பேருக்கும் நேர்காணல் முடிக்கப்பட்டிருக்கிறது. இன்று அல்லது நாளை அவர்களுக்கு கவுன்சிலிங் முடிக்கப்பட்டு நிரந்தர பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று மூன்றாவது நாளாக செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கூடுவாஞ்சேரியிலும், கிளாம்பாக்கத்திலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications