சென்னை சென்ட்ரல் லாட்ஜில்.. காதலனுடன் நர்சிங் மாணவி.. 2 கே கிட்ஸ் அறிய வேண்டிய பாடம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பெரியமேடு, குமரப்பா தெருவில் உள்ள பிரபல தங்கும் விடுதியில் உள்ள ஒரு அறை நேற்று காலை நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது. விடுதி ஊழியர்கள் அறை கதவைத் தட்டிப் பார்த்தார்கள். அறைக்குள் இருந்து எந்த சத்தமும் இல்லை. அறையின் உள்ளே சாவி துவாரம் வழியாக பார்த்த காட்சி அவர்களை அடிப்போக வைத்துள்ளது. இளம் பெண் இருந்த கோலம் தான் அதற்கு காரணம் ஆகும்.

சென்னை பெரியமேடு, குமரப்பா தெருவில் உள்ள பிரபல தங்கும் விடுதியில் உள்ள ஒரு அறை நேற்று காலை நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை. விடுதி ஊழியர்கள் அறை கதவைத் தட்டிப் பார்த்திருக்கிறார்கள். ஆனால் விடுதி அறைக்குள் இருந்து எந்த சத்தமும் வரவில்லை. எவ்வளவோ முயன்றும் திறக்கப்படவில்லை.

Nursing Student with Boyfriend at Chennai Central Lodge A Lesson 2K Kids Need to Learn

சந்தேகமடைந்த ஊழியர்கள், அறைக்கதவின் சாவி துவாரம் வழியாக பார்த்தார்கள். அந்த அறையில் தங்கிய இளம்பெண், கழுத்து அறுக்கப்பட்டு, கொல்லப்பட்டு படுக்கையில் பிணமாக கிடந்தார். அவருடன் தங்கிய வாலிபர், மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கியிருந்தார். கதவை உடைக்கவில்லை. உடனடியாக இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், பெரியமேடு காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் ஆகியோர் போலீஸ் படையுடன் விரைந்து வந்தனர். அறையின் கதவு உடைக்கப்பட்டது.

அங்கு இறந்து கிடந்த இளம்பெண்ணின் உடலும், தூக்கில் தொங்கிய வாலிபரின் உடலும் மீட்கப்பட்டது. அத்துடன் அந்த உடல்கள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. விடுதி அறையை போலீசார் சோதனை செய்த போது, புதிதாக வாங்கப்பட்ட 'பிளேடு' ஒன்று கிடந்தது. அருகில் எலி மருந்து பாட்டிலும் கிடந்தது. பிளேடையும், எலி மருந்து பாட்டிலையும் போலீசார் கைப்பற்றினார்கள்.

இறந்து கிடந்த அந்த இளம்பெண்ணும், வாலிபரும் கடந்த 23-ந்தேதி காலை 8 மணிக்கு அறை எடுத்து தங்கி உள்ளார்கள். இறந்து கிடந்து இளைஞர் சென்னை ராமபுரம் இந்திரா நகரை சேர்ந்த பாரதி பெருமாள் (வயது 21) என்பது விசாரணையில் தெரியவந்தது. இறந்து கிடந்த பெண்ணின் பெயர் விபரம் முதலில் தெரியவில்லை. அறையில் கிடந்த அவரது செல்போன் மூலம் போலீசார் அந்த பெண்ணின் உறவினர்களிடம் பேசி அவரைப் பற்றிய தகவல்களை தெரிந்து கொண்டனர். அந்த பெண்ணின் பெயர் பவ்யா (21) என்றும், சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பாரதி நகரை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. அந்த இளம்பெண், சென்னை வடபழனியில் உள்ள நர்சிங் கல்லூரி ஒன்றில் பி.எஸ்.சி. நர்சிங் இறுதியாண்டு படித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.

பாரதி பெருமாள் கார் டிரைவராக வேலை பார்த்துள்ளார். இருவரும் ஒருவரையொருவர் காதலித்துள்ளனர். இருவரும் திருமணம் செய்யவும் முடிவு செய்து நெருக்கமாக பழகி வந்துள்ளனர். ஆனால் இவர்களுடைய காதல் திருமணத்துக்கு சாதி தடையாக இருந்துள்ளது. இருவீட்டு பெற்றோர்களும் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பவ்யா, அவரது பெற்றோர் சம்மதத்துடன் வேறொருவரை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. அந்த திருமணம் பவ்யாவுக்கு சந்தோஷத்தை கொடுக்கவில்லை. இதனால் கணவரை பிரிந்து பவ்யா மீண்டும் தனது படிப்பை தொடர சென்னைக்கு வந்துள்ளார். அப்போது தனது காதலர் பாரதி பெருமாளை சந்தித்து தனது கசந்துபோன திருமண வாழ்க்கை பற்றி கூறினாராம். மீண்டும் இவர்கள் அடிக்கடி சந்தித்துப் பழகியுள்ளனர்.

இந்த நிலையில்தான் இருவரும் விடுதியில் அறை எடுத்து ஒன்றாக தங்கியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, முதலில் பவ்யாவுக்கு தெரியாமல் அவருக்கு சாப்பாட்டில் எலி மருந்து விஷத்தை கலந்து கொடுத்து மயக்கம் அடைய செய்திருக்கலாம் என்றும், மயக்கத்தில் இருக்கும்போது பவ்யாவை பிளேடால் கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு, அதன்பிறகு உயிர் வாழ விரும்பாமல் பாரதி பெருமாளும் அதே விடுதி அறையிலேயே தூக்கில் தொங்கி உயிரை விட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்

பவ்யாவின் உறவினர்களும், பாரதி பெருமாளின் உறவினர்களும் நேற்று ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு வந்து இருவரின் உடலை பெற்றுக்கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து பெரியமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காதல் திருமணம் கசந்து போன நிலையில், அதனை தொடர்ந்து மீண்டும் பழைய காதலை பெண் புதுப்பிக்க சென்றதால், அது எமனாகி உள்ளது.

முக்கிய அறிவிப்பு: எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது.. தற்கொலை எண்ணம் இருந்தால் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய இலவச உதவி எண்கள்

Tele MANAS (தேசிய உதவி எண்)14416 : மத்திய அரசின் 24/7 மனநல உதவி மற்றும் ஆலோசனை எண். (1-800-891-4416 என்றும் அழைக்கலாம்).

மாநில உதவி எண் (104) 104 தமிழ்நாடு அரசின் சுகாதார உதவி சேவை (இதுவும் மனநல ஆதரவு வழங்குகிறது).

ஸ்னேகா (Sneha) 044-24640050 சென்னையில் உள்ள தற்கொலை தடுப்பு உதவி அமைப்பு.

AASRA +91-22-27546669 தற்கொலை தடுப்பு மற்றும் ஆலோசனைக்கான 24/7 சேவை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+