ஓபிஎஸ் போன்ற பச்சோந்தி யாருமில்லை.. அதிமுக அலுவலகத்தை சூறையாடியது திமுகதான்.. சிவி சண்முகம் ஆவேசம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுயநலத்திற்காக உடன் இருப்பவர்களையும் பலி கொடுக்க தயங்காதவர் ஓ.பன்னீர் செல்வம் என்று அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வைக் கண்டித்து சி.வி.சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் -

    தமிழகத்தில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு மற்றும் சட்டமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தலைமையில் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது . இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    சிவி சண்முகம் பேச்சு

    சிவி சண்முகம் பேச்சு

    இந்த ஆர்ப்பாட்டத்தில் சி.வி.சண்முகம் பேசுகையில், தமிழகத்தில் கஞ்சா போதையால் சீரழியும் மாணவச் சமுதாயத்தை பாதுகாக்க திமுக அரசு தவறுகிறது. ஆட்சி செய்யத் தெரியாத, தகுதி இல்லாத அமைச்சரை கட்டுக்குள் வைத்திருக்க முடியாத முதலமைச்சர் ஸ்டாலினால் தான் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக எம்.பி. கௌதம சிகாமணி மற்றும் அவரது தந்தை உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி இதுவரை நேரில் செல்லாதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

    ஓபிஎஸ் ஒரு பச்சோந்தி

    ஓபிஎஸ் ஒரு பச்சோந்தி

    அதிமுகவில் உள்ள தொண்டர்கள் ஓபிஎஸ் போன்று பச்சோந்திகள் அல்ல. ஓபிஎஸ் தன்னுடைய சுயநலத்திற்காக யாரையும் பலி கொடுக்க தயங்காதவர். உடன் இருப்பவரையும் காட்டிக் கொடுப்பவர். தமிழகத்தில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி மலரும்.
    எம்ஜிஆர் மாளிகையை சூறையாடியது ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அல்ல. திமுக அரசு காவல்துறையை விட்டு சூறையாடிள்ளது.

    திமுக அரசு

    திமுக அரசு

    மத்திய அரசு வற்புறுத்தியதால் வீட்டு வரியை, மின் கட்டணத்தை உயர்த்துகிறோம் என்று திமுக அரசு சொல்வதில் உண்மையில்லை. ஏழை, எளிய மக்களை பாதிக்கும் வகையில் மின் கட்டண உயர்வை தமிழக அரசு அறிவித்துள்ளது. நாட்டில் இன்று என்ன நடக்கிறது என்பதைக் கூட தெரியாத ஒரு முதல்வர் தான் மு.க.ஸ்டாலின். அத்தியாவசிய பொருட்கள் மீது வரி உயர்த்தப்பட்டபோது ஏன் அப்போது திமுக அரசு கண்டிக்கவில்லை.

    நகைக்கடன்

    நகைக்கடன்

    தமிழகத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தினால் தான் 100 நாள் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது. அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது விலைவாசி கட்டுக்குள் இருந்தது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாலிக்குத் தங்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முடக்கிய திமுக அரசுக்கு விரைவில் பதிலடி கொடுப்போம். திமுகவின் பேச்சைக் கேட்டு நகைக்கடனை வங்கியில் அடகு வைத்த தாய்மார்கள் இன்றைக்கு நடுரோட்டில் நிற்கிறார்கள்.

    பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு ரூ.16 குறைத்துள்ளது. ஆனால், இதுவரை திமுக அரசு ஒரு நயாப் பைசாக் கூட குறைக்கவில்லை. கேட்டால் நாங்கள் ஏன் குறைக்க வேண்டும் என்கின்றனர். நம்பி வாக்களித்த மக்களை திமுக அவமானப்படுத்துவதாக குற்றம்சாட்டினார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+