அந்தரங்க உறுப்பு எதுக்கு? தாம்பத்தியத்திற்கு மறுத்த மனைவியால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு.. ஷாக் பின்னணி
பாட்னா: பீகாரில் கணவன் - மனைவி இடையே குடும்ப பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. சண்டையின் ஒரு பகுதியாக இரவில் தாம்பத்தியத்துக்கு மனைவி மறுத்ததால் ஆத்திரமடைந்த இளைஞர் அருகே உள்ள கோவிலுக்கு சென்று அந்தரங்க உறுப்பை வெட்டிய சம்பவம் திடுக்கிட வைத்துள்ளது.
பீகார் மாநிலத்தின் சாசாரம் மாவட்டம் குஷிரா கிராமத்தை சேர்ந்தவர் 25 வயது இளைஞர். இவர் திருமணம் ஆனவர். மனைவியுடன் வசித்து வருகிறார். திருமணமான புதிதில் கணவன் - மனைவி இடையே காதல் நிரம்பி வழிந்தது.

அதன்பிறகு அவர்கள் இருவருக்கும் அவ்வப்போது பிரச்சனை வந்துள்ளது. அதன்பிறகு சிறிது நேரத்தில் இருவரும் பேசி பிரச்சனையை முடித்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் தான், கடந்த சில நாட்களாக கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. குடும்ப விஷயம் தொடர்பாக தாம்பத்திய உறவு வைத்து கொள்வதிலும் இருவருக்கும் இடையே தகராறு நடந்து வந்தது. சண்டையின் ஒரு பகுதியாக அந்த பெண், தாம்பத்திய உறவுக்கு மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் இளைஞர் நொந்துபோய் உள்ளார். சம்பவத்தன்றும் இரவு 10 மணியளவில் கணவன் - மனைவி இடையே பிரச்சனை வெடித்தது. கணவன் தாம்பத்திய உறவுக்கு ஆசைப்பட்ட நிலையில் அவரது மனைவி மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. எவ்வளவு சொல்லியும் மனைவி கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற இளைஞர் கூர்மையான கத்தியை எடுத்து கொண்டு அருகே உள்ள சிவன் கோவிலுக்கு சென்றார். சிவன் கோவில் வளாகத்தில் நின்ற இளைஞர் திடீரென்று தனது அந்தரங்க உறுப்பை வெட்டி கொண்டார். அதுமட்டுமின்றி கழுத்து உள்பட பிற இடங்களிலும் கத்தியால் வெட்டி தற்கொலைக்கு முயன்றார்.
இதனால் உடலில் இருந்து ரத்தம் அதிகமாக வெளியேறிய நிலையில் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். இந்த சத்தம் கேட்டு அங்கு வந்தவர்கள் இளைஞரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். பிறகு மேல்சிகிச்சைக்காக வாரணாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அவரது உடல்நிலை மோசமாக தான் உள்ளதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.
இதுபுற்றி டாக்டர் மணிராஜ் ராஜண்ணா கூறுகையில், ''இளைஞரின் அந்தரங்க உறுப்பு மற்றும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற துயர செயல்களை யாரும் செய்யக்கூடாது'' என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசில் இன்னும் புகார் அளிக்கப்படவில்லை. இதனால் போலீசார் இன்னும் விசாரணையை தொடங்கவில்லை.
-
சிதம்பரத்தில் ஷாக்! உல்லாசத்திற்கு வர மறுத்த இளம்பெண்ணை கொன்ற முதியவர் கைது! -
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி'












Click it and Unblock the Notifications