படுத்த படுக்கையாய் பவா லட்சுமணன்.. லெஜெண்ட் சரவணா ஓடி வந்து தந்த 2 லட்சம்.. வடிவேலுவின் முடிவு என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பவா லட்சுமணனுக்கு, சௌத்ரி மகனான நடிகர் ஜீவா மாதம் 15 ஆயிரம் ரூபாய் அவருடைய வங்கி கணக்கில் தொடர்ந்து செலுத்திக் கொண்டிருக்கிறார். விஜயகாந்த் இருந்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது என்று பவா லட்சுமணன் சொல்வது நியாயமான வருத்தம்தான். விஜயகாந்த், விவேக், மயில்சாமி, மனோபாலா இவர்கள் இருந்திருந்தால் ஆளுக்கு ஒரு 5 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்து வாழ்வாதாரத்திற்குக் கஷ்டப்படாத சூழ்நிலை இருந்திருக்கும் என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார்.

Media circle என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "பவா லட்சுமணனை தமிழ் சினிமாவில் தெரியாதவர்களே இருக்க முடியாது. சூப்பர் குட் ஃபிலிம்ஸ் சௌத்ரி சார் கிட்ட கிட்டத்தட்ட 30, 35 வருஷம் தொடர்ந்து ப்ரொடக்ஷன் மேனேஜரா இருந்தாரு. சௌத்ரி சாரோட எல்லா படங்களுக்குமே இவர்தான் மேனேஜர்.

Legend Saravanan Bava Lakshmanan Vadivelu 2 Lakh Financial Assistance Tamil Cinema Kollywood News Tamil Comedian Celebrity Help Health Update Viral News 2

பாவா லட்சுமணன் உண்மையிலுமே ரொம்ப நல்ல மனுஷன், நல்ல ஹியூமர் சென்ஸோட சிரிச்ச முகத்தோட பேசுவாரு. எனக்கு அவரோட நல்ல பழக்கம் உண்டு. நான் பண்ணுன 'ஊதாரி' படத்துல ஒரு நாலஞ்சு நாள் காமெடி வேடத்துல நடிச்சாரு. அப்போ பல கதைகள் பேசி சிரிச்சிருக்கோம்.

சூப்பர் குட் ஃபிலிம்ஸ் சௌத்ரி

சூப்பர் குட் ஃபிலிம்ஸ் சௌத்ரியிடம் கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் தொடர்ந்து தயாரிப்பு மேனேஜராக பணிபுரிந்தார். சௌத்ரியின் எல்லா படங்களுக்கும் இவர்தான் மேலாளர்.

விக்ரமனின் முதல் படமான 'புது வசந்தம்' கதையை விக்ரமன் முதன்முதலில் பவா லட்சுமணனிடம்தான் சொன்னார். அவர்தான் சௌதரியிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார்.

பவா லட்சுமணனை முக்கியத்துவம்

அதேபோல 'ஆனந்தம்' கதையை வைத்துக் கொண்டு லிங்குசாமி பல தயாரிப்பாளர்களை பார்த்து கொண்டிருந்தபோது, பவா லட்சுமணனை பார்த்து கதை சொல்லிய பிறகுதான் அவர்தான் சௌத்ரியிடம் அழைத்துச் சென்றார். 'நீ வருவாய் என' ராஜ்குாரன், 'பூமகள் ஊர்வலம்' ராசுமதுரவன் என முக்கியமான பல பிரபலமான இயக்குநர்கள் பவா லட்சுமணனிடம் முதலில் கதை சொல்லித்தான் சௌதரியை பார்த்தார்கள்.

அதாவது ஆர்.பி. சௌத்ரி அவர்களைப் பார்க்க வேண்டும் என்றால் பவா லட்சுமணனைப் பார்த்தால்தான் பார்க்க முடியும். அவரிடம் கதை சொன்னால், அது பிடித்திருந்தால் தயாரிப்பாளரிடம் சிபாரிசு செய்வார் என்று பல பேர் இவருடைய சந்திப்பிற்காகக் காத்திருப்பார்கள். அப்படி ஒரு காலம் இருந்தது.

நடிகராகவும் 'மாயி' திரைப்படத்தில் 'வாமா மின்னலு' என்ற வசனத்தின் மூலமாகப் பயங்கர வைரலாகிப் பிரபலமானார். அப்புறம் 'ஆனந்தம்' திரைப்படத்தில் திருடனாக வந்து வேலைக்காரனாக இருக்கும் நல்ல கேரக்டர் கொடுத்திருந்தார்கள். 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சர்க்கரை நோயின் தீவிரம்

சினிமாவில் எப்பொழுதுமே பிஸியாக இருக்கும்போது மற்ற விஷயங்களைப் பற்றி யோசிக்க சிந்தனையே போயிருக்காது. இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆனால் இன்று முதிர்ந்த வயது வரும்போது உடல் பின்னடைவு வரத்தான் செய்யும். சர்க்கரை நோயினால் விரல் அகற்றப்பட்டுக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார். காசு பணம் சேர்த்து வைத்திருந்தால் நிச்சயமாக இப்படி ஒரு சூழல் வந்திருக்காது.

சினிமாவில் இருக்கின்ற பிரபலங்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், அந்தப் புகழ் அப்படியே இருக்கும் என்று நினைத்து சேமிப்பைத் தவறவிட்டு விடுகிறார்கள். அன்றைக்கு கிடைக்கின்ற பணத்தை அன்றைக்கே செலவழித்து விடுகிறார்கள். இந்தச் சேமிப்பு இல்லாததால்தான் வீட்டு வாடகை கூடக் கட்ட முடியாத நிலைமை வந்துவிட்டது.

லெஜெண்ட் சரவணன், 2 லட்சம் ரூபாய்

லெஜெண்ட் சரவணன், 2 லட்சம் ரூபாய் கொடுத்து உதவி செய்துள்ளார். அவருக்கும் இவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.. அப்படி இருக்கும்போது உதவி செய்துள்ளார் என்றால் அது பெரிய விஷயம், அந்த நல்ல மனதைப் பாராட்ட வேண்டும். கூல் சுரேஷ் சென்று உதவி செய்து, வீடு வாடகைக்கு எடுத்து வீட்டுச் சாமான்கள் எல்லாம் வாங்கி கொடுத்து தங்க வைக்க ஏற்பாடு செய்துள்ளார்.

சௌத்ரி மகனான நடிகர் ஜீவா, பவா லட்சுமணனுக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் அவருடைய வங்கி கணக்கில் தொடர்ந்து செலுத்திக் கொண்டிருக்கிறார். விஜயகாந்த் இருந்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது என்று பவா லட்சுமணன் சொல்வது நியாயமான வருத்தம்தான். விஜயகாந்த், விவேக், மயில்சாமி, மனோபாலா இவர்கள் எல்லாம் இருந்திருந்தால் ஆளுக்கு ஒரு 5 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்து வாழ்வாதாரத்திற்குக் கஷ்டப்படாத சூழ்நிலை இருந்திருக்கும்.


வடிவேலு உதவி செய்வாரா

ஆனால் பவா லட்சுமணனால் பலனடைந்துவிட்டு, இன்று உதவி கேட்டு பேசினால் நிறைய பேர் போன் எடுப்பதில்லை என்று வேதனையுடன் சொல்கிறார்.

வடிவேலுவின் நகைச்சுவை, மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றதற்கு அவரது தனிப்பட்ட திறமை மட்டுமின்றி, பவா லட்சுமணன், போண்டாமணி, அல்வா வாசு போன்ற சக நடிகர்கள் கொடுத்த ஆதரவும் டைமிங்கும் மிக முக்கியமான காரணங்களாகும். அதனால் ஒரு காலத்தில் தமக்குத் துணையாகவும் நண்பர்களாகவும் இருந்த சக கலைஞர்கள் இன்று வறுமையில் கஷ்டப்படும் போது வடிவேலு தேடிச் சென்று உதவ வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக உள்ளது.

இருந்தாலும் "இதை நீங்கள் செய்தே தீர வேண்டும்" என்று வடிவேலுவைச் சட்டப்படியாகவோ அல்லது தனிப்பட்ட முறையிலோ யாரும் கட்டாயப்படுத்த முடியாது.. அவர்களுக்கு உதவுவது என்பது முழுமையாக வடிவேலுவின் சொந்த முடிவைப் பொறுத்தது' என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+