"ஜவ்வாது பெண்ணானது" சத்தியமங்கலம் தாசில்தார் அரசு வாகனத்தில் ரியலி ரீல்ஸ்? வட்டாட்சியர் பகீர் பதில்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: சத்தியமங்கலம் தாசில்தாரின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக ஷேர் ஆகி கொண்டிரக்கிறது.. இதை பார்த்த நெட்டிசனக்ள, "அரசு எவ்வழியோ, அதிகாரிகளும் அவ்வழியே" என்று பலரும் கமெண்ட்களை பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்.. அரசியல் களம் ஏற்கனவே 'ரீல்ஸ்' விவகாரத்தில் புகைந்து கொண்டிருக்கும்போது, இப்படியொரு வீடியோ வெளியாகி தவெக அரசுக்கு மேலும் புதிய நெருக்கடியையும் மக்கள் மத்தியில் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது...!!

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, மக்களுக்குத் தேவையான நற்பணிகளை செய்யாமல் வெறும் ரீல்ஸ் செய்து மட்டுமே காலத்தை கடத்தி வருவதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

Sathyamangalam Tahsildar Jamuna Rani Erode District Government Vehicle Instagram Reels Viral Video Revenue Department Tamil Nadu News

ரீல்ஸ் ஆட்சி தவெக

சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பின்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், "தவெக அரசு ரீல்ஸ் ஆட்சியாக இல்லாமல் மக்களுக்கான ஆட்சியாக நடக்க வேண்டும்" என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும், "என்னைப் பொறுத்தவரை தவெக அரசு என்பது ஒரு ரீல்ஸ் ஆட்சி தான். இன்னும் ரீல்ஸ் மோகத்தில்தான் அமைச்சர்களும், இந்த அரசும் இருக்கிறது. மக்களுக்கான உண்மையான, ரியல் ஆட்சியாக இதுவரை அவர்கள் தங்களது பணிகளைத் தொடங்கவில்லை. இனியும் தொடங்குவார்கள் என்ற நம்பிக்கை மக்களுக்கு இல்லை" என்று மிகவும் காரசாரமாக சாடியிருந்தார்.

எதிர்க்கட்சிகளின் இந்த ரீல்ஸ் ஆட்சி என்ற விமர்சனத்திற்கு தவெக தரப்பினரும், சோஷியல் மீடியா ஆதரவாளர்களும் இதற்கு பாயிண்ட் பை பாயிண்ட்டாக பதிலடி கொடுத்து வருகின்றனர்.

கரூரில் மிகப்பெரிய சம்பவம்

கடந்த 5 வருட கால திமுக ஆட்சியில், அப்போதைய முதலமைச்சர் ஸ்டாலினே சோஷியல் மீடியாவில் 2 இரண்டு சிறுவர்களை தன்னுடைய ரூமுக்கே அழைத்து வந்து ரீல்ஸ் எடுத்த நிகழ்வுகளை நெட்டிசன்கள் ஆதாரங்களுடன் ஷேர் செய்து, திமுகவையும் சாடி வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல், கரூர் மாநாட்டின் போது "கரூரில் மிகப்பெரிய சம்பவம்" என்று எல்லா சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்களுக்கும் ஒரே மாதிரியான கண்டெண்ட்டை கொடுத்து திமுக விளம்பரம் தேடியதையும் அவர்கள் சுட்டிக்காட்டி வருகிறார்கள்.

அதாவது, விளம்பரங்களை மட்டுமே நம்பி 5 ஆண்டுகள் ஆட்சி நடத்திவிட்டு, தவெகவை விமர்சிக்க உதயநிதிக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ள தவெகவினர், ரீல்ஸ் மோகம் குறித்து தன்னுடைய அப்பாவிடம் உதயநிதி முன்பே பேசியிருந்தால் கொளத்தூரிலும் அவர் தோற்றிருக்க மாட்டார், திமுகவும் ஆட்சியை இழந்திருக்காது என்றெல்லாம் பதிலடியாக சாடி வருகின்றனர்.


சத்தியமங்கலம் தாசில்தார்

இப்படித் தமிழக அரசியலில் ரீல்ஸ் என்ற வார்த்தை ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், ஈரோடு மாவட்டத்தில் அரசு அதிகாரி ஒருவர் செய்த காரியம் இந்த சர்ச்சைக்கு மேலும் நெய் ஊற்றுவது போல் அமைந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வருவாய் வட்டாட்சியராக பணியாற்றி வரும் ஜமுனா ராணி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடம்பூர் மலைப் பகுதிக்கு அரசு ஆய்வுப் பணிக்காக சென்றுள்ளார் இந்த தாசில்தார்.

அப்போது தனக்கு வழங்கப்பட்ட அரசு வாகனத்தின் அருகே நின்றபடி, ஜவ்வாது பெண்ணானது என்ற சினிமா பாட்டை பின்னணியில் ஒலிக்கவிட்டு வீடியோ எடுத்து அதனைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். அரசுப் பணியின் போது, அரசு வாகனத்தைப் பயன்படுத்தி அதிகாரி ஒருவர் இப்படி வீடியோ வெளியிட்டது பொதுமக்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

ஜவ்வாது பெண்ணானது

இது குறித்து வட்டாட்சியர் ஜமுனா ராணியிடம் விளக்கம் கேட்டபோது, "நான் அரசு வாகனத்தின் முன் நின்று வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டது உண்மைதான், ஆனால் அது ரீல்ஸ்' அல்ல என மழுப்பலாகப் பதிலளித்துள்ளார். அரசியல் களம் ஏற்கனவே ரீல்ஸ் விவகாரத்தில் கொதித்துக் கொண்டிருக்கும் வேளையில், அரசு அதிகாரியின் இந்தச் செயல்பாடு தவெக அரசுக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், மாவட்டத்தில் ஆட்சியருக்கு அடுத்தபடியாக உள்ள வட்டாட்சியர், பணி நேரத்தில் வரம்புகளை மீறி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது ஏற்புடையது அல்ல எனச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.. அரசு அதிகாரிகள் இது போன்ற செயல்களில் ஈடுபடாதவாறு உயர் அதிகாரிகள் முறையாக நெறிமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, "அரசு எவ்வழியோ அதிகாரிகளும் அவ்வழியே" எனப் பலரும் கமெண்ட்களில் தவெக அரசை விமர்சித்தும் வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+