முதல்வர் கோபத்தில் உள்ளார்.. பார்க்க முடியாது! கில்லி சரத் மீது கடுப்பில் விஜய்! அமைச்சர் பதவி காலி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சி அமைந்த சில நாட்களிலேயே, உட்கட்சிப் பூசல்களும் சலசலப்புகளும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. போதைப்பொருள் ஒழிப்புப் பேரணியில் கலந்துகொண்டு முதல்வர் விஜய் நீதியுரை வழங்கிய சில மணி நேரங்களிலேயே, அவரது சொந்த அமைச்சரவையை சேர்ந்த மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் 'கில்லி' சரத்குமாரின் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த விவகாரம் தற்போது தவெக தலைமை வரை சென்று, அமைச்சரவை மாற்றத்திற்கான விவாதமாக உருவெடுத்துள்ளது.

vijay tvk

போதை ஒழிப்பு பேரணியும் வெடித்த சர்ச்சையும்:

கடந்த வாரம் போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிராக முதல்வர் விஜய் தலைமையில் ஒரு பிரம்மாண்ட மாரத்தான் பேரணி நடைபெற்றது. பொதுமக்களிடையே இந்த நிகழ்வு பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த சூழலில், அதற்கு நேர்மாறாக சில மணி நேரங்களில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ காட்டுத்தீயாக பரவியது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது எடுக்கப்பட்ட அந்த பழைய வீடியோவில், அமைச்சர் கில்லி சரத் தனது மொபைல் திரையில் ஒரு வெள்ளை நிற பவுடரை ஏடிஎம் கார்டு கொண்டு நேர்த்தியாக கோடு கிழிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைதளவாசிகள் இந்த வீடியோவை 'தக் லைஃப்' (Thug Life) என்ற டேக்குகளுடன் பகிர்ந்து, தவெக அரசுக்கு எதிராகவும், முதல்வரின் போதை ஒழிப்பு கொள்கைக்கு எதிராகவும் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கினர். இது கட்சிக்கும் ஆட்சிக்கும் மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்தியது.

விளக்கத்தால் அதிகரித்த அதிருப்தி - விஜய்யின் அதிரடி உத்தரவு:

சர்ச்சை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, அமைச்சர் கில்லி சரத் தரப்பில் இருந்து ஒரு விளக்க வீடியோ வெளியிடப்பட்டது. அதில், "விளையாட்டு அரங்கில் தனது ஒன்றரை வயது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால், மாத்திரையை நசுக்கித் தருவதற்காகவே மொபைல் போனையும் கார்டையும் பயன்படுத்தினேன்" என்று அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால், இந்த விளக்கம் பொதுமக்களிடையேயும் அரசியல் வட்டாரத்திலும் நம்பும்படியாக இல்லை என்றும், எரியும் நெருப்பில் நெய்யை ஊற்றியது போல மாறிவிட்டது என்றும் தவெகவின் முக்கிய நிர்வாகிகள் கருதுகின்றனர்.

இந்த விவகாரம் ஒட்டுமொத்தமாக வைரலாகி முதலமைச்சர் விஜய்யின் கவனத்திற்குச் சென்றது. வீடியோவைப் பார்த்த முதல்வர் கடும் அதிர்ச்சியடைந்ததாகவும், போதை ஒழிப்பு பேரணி நடத்திய அதே நாளில் இப்படி ஒரு சம்பவம் அரசுக்கு அவமதிப்பை தேடித்தந்துள்ளதாகக் கூறி பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை அழைத்து மிகக் கடுமையான தொனியில் கண்டித்ததாகவும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், கில்லி சரத்தை அமைச்சரவையில் இருந்து உடனடியாக நீக்கலாமா என்ற ஆலோசனையிலும் முதல்வர் இறங்கியதாகத் தெரிகிறது.

கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் நள்ளிரவு பதற்றம்:

தனது அமைச்சர் பதவி பறிபோகும் சூழல் உருவாகியிருப்பதை உணர்ந்த கில்லி சரத், கடும் கலக்கமடைந்தார். உடனடியாக நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர, தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கிரீன்வேஸ் சாலையில் உள்ள பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் இல்லத்திற்கு விரைந்தார்.

அங்கு புஸ்ஸி ஆனந்தைச் சந்தித்த சரத், மிகவும் உருக்கமாகவும் பதற்றத்துடனும் பேசியுள்ளார். "அண்ணே, இது ஏதோ ஒரு பழைய இன்ஸ்டாகிராம் ரீல் வீடியோ. அதை வேணுமின்னே திட்டமிட்டு இப்போ பெருசு பண்ணி அரசியல் பண்றாங்க. என் விளக்கத்தை முதல்வர் சொல்லி புரிய வையுங்கண்ணே. என் பதவியைக் காப்பாத்துங்க" என்று கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.

கையை விரித்த புஸ்ஸி ஆனந்த்

இருப்பினும், இந்தச் சந்திப்பில் அமைச்சர் சரத்திற்கு எந்தவித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. கில்லி சரத்தின் குடும்பத்தினர் முன்னிலையிலேயே கையை விரித்த புஸ்ஸி ஆனந்த், "தளபதி இந்த விஷயத்தில் பயங்கர கோபத்தில் இருக்கிறார். என்னால் இதில் தலையிட முடியாது. கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் எந்த விஷயத்தையும் அவர் பொறுத்துக் கொள்ள மாட்டார். என்னால் எந்த உத்தரவாதமும் தர இயலாது" என கறாராகக் கூறிவிட்டதாகத் தெரிகிறது.

முதலமைச்சரின் இந்த கடுமையான அணுகுமுறை மற்றும் புஸ்ஸி ஆனந்தின் பிடி கொடுக்காத பேச்சு ஆகியவற்றால், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அமைச்சரவை விரிவாக்கம் அல்லது மாற்றம் மிக விரைவில் நடக்கலாம் என்றும், அதில் கில்லி சரத்தின் விக்கெட் விழுவது நிச்சயம் என்றும் அறிவாலய மற்றும் கோட்டை வட்டாரங்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+