சிங்கப் பெண் படைக்கு சிறப்பு அதிகாரி நியமித்த விஜய்.. சார்ஜ் எடுக்கும் பெண் ஐஜி
சென்னை: சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சியமைத்துவிட்டது. தவெக ஆட்சியமைத்தவுடன் தமிழகத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். விஜய் முதல்வராக பதவியேற்றவுடன் பெண்கள் பாதுகாப்புக்காக, காவல்துறையில் சிங்கப் பெண் சிறப்பு படை உருவாக்கப்பட்டது. இந்நிலையில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர். இதில் சிங்கப் பெண் சிறப்பு படைக்கு பெண் ஐஜி சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கூடுதல் தலைமை செயலாளர் மணிவாசன் வெளியிட்டுள்ள உத்தரவில், நிர்வாக பிரிவு டிஜிபி வெங்கட்ராமன், குடிமைப்பிரிவு வழங்கல் சிஐடி கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். காவல் தலைமை அலுவலகம் ஐஜி பவானீஸ்வரி, சிங்கப் பெண் சிறப்பு படை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் உள்ள அவினாஷ்குமார், சென்னை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிங்கப் பெண் படைக்கு சிறப்பு அதிகாரி
சென்னை ஐஜியாக இருந்த பிரவீன்குமார் வடக்கு மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த சரவணசுந்தார் சென்னை குற்றப்பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டார். காத்திருப்போர் பட்டியலில் உள்ள டிஐஜி மகேஷ் வேலூர் டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை போக்குவரத்து இணை ஆணையராக இருந்த விஜயகுமார், சென்னை சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த அபிஷேக் குப்தா, தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆவடி காவல் பயிற்சி கண்காணிப்பாளராக இருந்த பிருந்தா, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை சைபர் க்ரைம் கண்காணிப்பாளராக இருந்த ஷனாஸ், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த அரவிந்த், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தாம்பரம் துணை ஆணையராக இருந்த பவன்குமார், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலை உதவி கண்காணிப்பாளராக உள்ள சதீஷ்குமார், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்த ரவீந்திரகுமார் குப்தா, புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. மொத்தம் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
-
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
உங்கள் மண்டையில் ஏதாவது இருக்குதா! விஜய்யின் பெரம்பூர் தொகுதியில் வெடித்து பேசிய மேயர் பிரியா! -
இரக்கமே காட்டாதீங்க.. கேஸை போடுங்க.. திமுக மாஜி அமைச்சர்களுக்கு விஜய் செக்.. வரிசையாக ஆக்சன் -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
இவ்வளவு ஆதரிச்சதே அதிகம்.. இன்னும் கொஞ்சம் வேணுமாம்! அரசியல் பேரிடர்.. விஜய்யை இறங்கி அடித்த சீமான் -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
“மின்வெட்டு ஏற்படுவது உண்மைதான்.. மறைக்கவோ, மறுக்கவோ இல்லை”.. ஒப்புக்கொண்ட மின்வாரிய தலைவர் -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
திருப்பரங்குன்றம் தீபம்.. தவெக அரசின் நிலைப்பாடு.. ஓபனாக பேசிய சிபிஎம்! முக்கிய டிமாண்ட்! -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்!











Click it and Unblock the Notifications