நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்

Subscribe to Oneindia Tamil

மதுரை: நாங்க தோத்து தான் போயிட்டோம் தவிர.. செத்துப் போகல.. புரிந்து கொள்ளுங்கள்,
விஜய்க்கு எதுவும் நடந்தால் அதற்கு அதிமுக பொறுப்பல்ல எனவும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பைத்தியக்காரர் போல பேசுகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மதுரை தெப்பக்குளம் பகுதியில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி ஜெயக்குமார்.

RB Udhayakumar

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்," தலைமை மீது மனதாங்கல் ஏற்பட்டு சிலர் எதிரியிடம் சரணாகதி அடைந்து வருகிறார்கள். இது போன்று நாவலர் நெடுஞ்செழியன், எஸ்டிஎஸ் உள்ளிட்ட சில தலைவர்கள் தலைமை மீது மனத்தாங்கல் ஏற்பட்டு மீண்டும் தாய்கழகத்தில் இணைந்த வரலாறு உண்டு.

ஆர்.பி. உதயகுமார்

இது எல்லாம் பார்த்து சலித்து போன வரலாறு. தாய் அருமை தெரியாமல் சிலர் அன்பும் அரவணைப்பும் எங்கே கிடைக்கும் என்று தேடி ஓடும் காட்சிகளை பார்க்கக் கூடிய சூழலை பார்க்கும்போது வேதனையாக உள்ளது. மனத்தாங்கல் ஏற்பட்டு சென்றவர்கள் மீண்டும் தாய்கழகத்தில் இணைந்த வரலாறு உண்டு. அதுபோல முன்னாள் அமைச்சர்கள் கருத்து வேறுபாட்டால் சென்றுள்ளனர். அவர்களுக்கு தெளிவு கிடைக்கும் போது அவர்கள் மீண்டும் தாய் கழகத்திற்கு வருவார்கள்.

விஜய்

நம்மை பார்த்து சில சிரிப்பா சிரிக்கிறாங்க.. நாங்க தோத்து தான் போயிட்டோம் தவிர செத்துப் போகல.. தம்பிகளா புரிந்து கொள்ளுங்கள்.. வாழ்க்கையில் நாங்கள் எத்தனையோ இழந்து உள்ளோம். எத்தனை விஜய் வந்தாலும் நாங்கள் பார்ப்போம். அதிமுக பல சோதனைகளையும் வேதனைகளையும் தாண்டி தான் வென்றுள்ளது. கோடான கோடி தொண்டர்கள் ஆணிவேராக இருந்து இந்த இயக்கத்தை தாங்கி பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். நேற்றைய காட்சிகளை சார்ந்த சில்லரை பசங்கள் சிரிப்பா சிரிக்கிறார்கள் .அது வேதனையாக உள்ளது.

தவெக

அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னாள் கூவி அழைத்தீர்கள். ஒரு காக்கா குருவி லெட்டர் பேடு கட்சி கூட உங்களை நம்பி வரவில்லை. விஜய் தம்பி மாயாஜாலம் போல் உங்களுக்கு ஆட்சி அதிகாரம் கிடைத்துள்ளது. அதனால் இன்றைக்கு அதிகாரத்தை தேடி வருகிறார்கள். உங்களுக்கு ஏதாவது ஒன்று ஆனால் அதற்கு அதிமுக பொறுப்பு அல்ல. விஜய் தம்பி உயிர் ஒரு முறை தான் போகும். உங்களுக்கு எச்சரிக்கையாக சொல்கிறேன். அன்போடு சொல்கிறேன். அம்புட்டுதான்.. நான் சொல்ல வர்றது வாழ்க்கை என்பது ஒரு வட்டம். மேல இருக்கிறது கீழே வருவதும் கீழே இருப்பது மேலே வருவதும் இந்த நாட்டில் இயற்கை நீதி.

பயிர் கடன் தள்ளுபடி

விஜய் ஆணவத்துடன் பேசுகிறார். இதே 41 பேர் இறந்தபோது ஓடி ஒளிந்து விட்டார். அடுத்த ஜென்மம் இருந்தால் விவசாயியாக பிறக்க வேண்டும் என்று டயலாக் விட்டார். பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை என்று விவசாயிகள் போராடி வருகிறார்கள். விவசாயிகளை சந்தித்தீர்களா விவசாயிகளை சந்திக்க கூட இன்னும் அவருக்கு நேரமில்லை மனமும் இல்லை. மேகதாது விஷயத்தில் அடுத்த கட்ட நகர்வு மர்மமாக உள்ளது.. மற்றும் பலர் என்று கூறிய விஜய் 25 சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து ஏன் சால்வை போட்டார் தன் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளவா?

ஆதவ் அர்ஜுனா

இந்த கணக்கு புரியாமல் விஜய் கைக்கூலிகளை வைத்துக்கொண்டு ஆள் பிடிக்கும் வேலையை செய்கிறார்.
ஆதவ் அர்ஜுனா என்ற பைத்தியக்கார அமைச்சர் பேசுகிறார். 50 சதவீத அதிமுகவினரை பிடித்து விட்டதாக கூறுகிறார் அப்படி ஒன்னும் நடக்கவில்லை.அதேபோல த.வே.க.ஆட்சிக்கு வரவேண்டும் என்று அதிமுகவினர் ஓட்டு போட்டனர் என்று கூறுகிறார். இப்படி இருந்தால் விஜய் ஆட்சிக்கு வர முடியாது. அவருக்கு பைத்தியம் பிடித்து விட்டதா என்பது தெரியவில்லை. இது போன்ற அரவேக்காடு கிறுக்கு அமைச்சர்களை எல்லாம் அமைச்சரவையில் உட்கார வைத்து நாம் பார்க்க வேண்டும் என்பது தலைவிதி" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+