Lottery: கடவுள் கண்னை திறந்துட்டார்! இந்திய பெண்ணுக்கு லாட்டரியில் அடித்த யோகம்.. ரூ.58 கோடி பரிசு மழை
சென்னை: ஒரே ஒரு லாட்டரி டிக்கெட் மொத்த வாழ்க்கையையும் மாற்றிவிடும் என்பது டெல்லி பெண்ணுக்கு நடந்துள்ளது. டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் அபுதாபியில் லாட்டரி வாங்கி இருக்கிறார். அந்த ஒரு டிக்கெட்டில் முதல் பரிசு ரூ.58 கோடி அடித்துள்ளது. ஒரே நைட்டில் கோடீஸ்வரி ஆகியிருக்கிறார் டெல்லி பெண். இதே போன்று துபாயில் வசித்து வரும் இந்தியர் ஒருவருக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசாக அடித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் பிக் டிக்கெட் என்ற பெயரில் லாட்டரி விற்பனை நடந்து வருகிறது. இதில் முதல் பரிசு ரூ 58 கோடியை டெல்லியை சேர்ந்த கனிகா அரோரா வென்றுள்ளார். மேலும் பல இந்தியர்களுக்கு இந்த பிக் டிக்கெட் பரிசில் கோடிக்கணக்கில் அதிர்ஷ்ட மழை கொட்டியுள்ளது. இது குறித்த விவரங்களை காணலாம்.

ஒரே நாளில் மாறிய வாழ்க்கை
ஐக்கிய அரபு அமீரகத்தில் தமிழகம், கேரளா என இந்தியர்கள் பலரும் வசித்து வருகின்றனர். கேரளாவை போன்று அமீரகத்திலும் லாட்டரி விற்பனை நடந்து வருகிறது. குறிப்பாக அபுதாபியில் பிக் டிக்கெட் என்ற பெயரில் லாட்டரி விற்பனை நடக்கிறது. இதில் அவ்வப்போது இந்தியர்கள் பரிசுகளை அள்ளும் செய்திகளை பார்த்து இருப்போம். அந்த வகையில் தான் தற்போது டெல்லியை சேர்ந்த கனிகா அரோரா என்ற பெண் முதல் பரிசு ரூ.58 கோடியை தட்டி தூக்கியுள்ளார்.
அபுதாபி "Big Ticket - 288" குலுக்கலில் 476107 என்ற டிக்கெட்டை வாங்கியிருக்கிறார். ஒரே ஒரு டிக்கெட் தானே.. சும்மா வாங்கி பார்ப்போம்.. அடித்தால் அடிக்கட்டும் என வாங்கி இருக்கிறார். இந்த நிலையில் இன்று அவருக்கு போன் வந்துள்ளது. உங்களுக்கு பரிசு அடித்துள்ளது. நீங்க தான் பிக் டிக்கெட் வின்னர் என சொல்லியிருக்கிறார்கள். இதை கேட்டதும் ஒரு நிமிடம் அப்படியே நின்றுவிட்டாராம்.. என்னால் நம்ப முடியவில்லை. இவ்வளவு பெரிய தொகை பரிசாக அடிக்கும் என நான் நம்பவில்லை.. எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
இந்தியருக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசு
இதே போன்று துபாயில் வசித்து வரும் மற்றொரு இந்தியரான ட்விங்கிள் அல்பின் என்பவருக்கும் அதிர்ஷ்ட மழை கொட்டியுள்ளது. துபாயில் வசிக்கும் இவரும் அபுதாபி பிக் டிக்கெட்டில் லாட்டரி வாங்கியிருக்கிறார். இவருக்கு பிஎம்டபிள்யூ சொகுசு கார் பரிசாக அடித்துள்ளது. அவர் வாங்கிய 028681 என்ற டிக்கெட்டிற்கு சொகுசு காருக்கான பரிசு அடித்துள்ளது.
இதே போன்று ரூ.1 மில்லியன் திர்ஹம் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2.3 கோடி) பரிசானது இந்தியர்கள் 5 பேருக்கு அடித்துள்ளது. அகில் என்.பி. (ஷார்ஜா), சிவபிரசாத் ரவீந்திரன் (அபுதாபி), உபேந்திரன் சிஜு (ராஸ் அல் கைமா), லான்சி பைஸ் (மங்களூர்) ஆகியோருக்கு இந்த பரிசு மழை கொட்டியுள்ளது.














Click it and Unblock the Notifications