பாடாய் படுத்தும் வெயில்.. அமெரிக்காவில் சுதந்திரதின அணிவகுப்பு ரத்து! களையிழந்த கொண்டாட்டம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வெப்ப அலை வீசி வருகிறது. இதன் காரணமாக வாஷிங்டனில் நடைபெற இருந்த அமெரிக்க சுதந்திர தின அணிவகுப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. தலைநகர் வாஷிங்டன், நியூயார்க் என அமெரிக்கா முழுக்க சுமார் 16 கோடி மக்களுக்கு வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இது போன்ற பல கொண்டாட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் 250-வது ஆண்டு சுதந்திர தினம் இன்று (ஜூலை 04) கொண்டாடப்படுகிறது. இதற்காக நாடு முழுவதும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அமெரிக்காவில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கக் கூடிய நிலையில், அங்கு சுதந்திர தின கொண்டாட்டங்கள் களையிழந்துள்ளன.

US Independence Day Parade Cancelled in Washington Due to Extreme Heat Wave

அமெரிக்க சுதந்திர தினம்

சுதந்திர தின நாளில் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களிலும் சுதந்திர தின அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக வதைக்கும் வெயில் காரணமாக சுதந்திர தின அணிவகுப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது. வாஷிங்டன்னில் சனிக்கிழமை காலை நடைபெறுவதாக இருந்த சுதந்திர தின விழா அணிவகுப்பு ரத்து செய்யப்படுவதாக நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் கூறினர்.

அணிவகுப்பு காலை 10:30 மணி அளவில் துவங்க இருந்த நிலையில், வெப்பத்தின் அளவு 110 முதல் 115 டிகிரி பாரன்ஹீட் வரை உயரும் என கணிக்கப்பட்டு இருந்தது. இந்த அதீத வெப்பம், அசவுகர்யத்தை ஏற்படுத்தும் என்பதால், நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. வெப்பத்தை பொறுத்தவரை இதே நிலைதான் நியூயார்க்கிலும் நீடித்தது. நியூயார்க் சிட்டியில் வெப்ப நிலை 105 ஃபாரன் ஹீட் (41 டிகிரி செல்சியஸ்) அளவை தாண்டியது.

முன்னெப்போதும் இல்லாத வகையில் வெப்பம்

115 ஃபாரன் ஹீட் வரை வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை மையத்தால் கணிக்கப்பட்டு இருந்தது. இதனால், வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தவிர்க்க நகரம் முழுவதும் கூலிங் மையங்கள் அமைக்கப்பட்டன. பொது நீச்சல் குளத்தில் செயல்பாட்டு நேரம் நீட்டிக்கப்பட்டது. வெப்பத்தின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் பல இடங்களில் அமெரிக்க வீரர்கள் தவித்ததை காண முடிந்தது. இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

வாஷிங்டன் நேஷனல் மால் பகுதியில் தன்னார்வலர்கள், அங்கு திரண்டு இருந்த பொதுமக்களுக்கு ஐஸ் பக்கெட்டில் வைத்து இருந்த வாட்டர் பாட்டில்களை கொடுத்தனர். பலர் வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தொப்பிகள் மற்றும் குடைகளை பயன்படுத்தி செல்வதையும் காண முடிந்தது. வழக்கத்திற்கு மாறான இந்த வெப்பத்தின் தாக்கத்தால் முன்னெப்போதும் இல்லாத வகையில் அமெரிக்காவின் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் களையிழந்தன.

பிரதமர் மோடி வாழ்த்து!

அமெரிக்காவில் நிலவும் அதீத வெப்பத்தின் தாக்கத்தால், சுதந்திர தின கொண்டாட்டங்கள் சற்று களையிழந்தாலும் சில இடங்களில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. உலக தலைவர்கள் பலரும் அமெரிக்க மக்களுக்கு வாழ்த்து சொல்லி வருகிறார்கள். அந்த வகையில் இந்திய பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியதாவது:-

இந்தியாவும் அமெரிக்காவும் முக்கியத்துவமான கூட்டாண்மையை கொண்டுள்ளன. ஜனநாயகத்தின் மீது இருநாடுகளும் கொண்டுள்ள பொதுவான அர்ப்பணிப்பு, சட்டத்தின் ஆட்சி மற்றும் இருநாட்டு மக்களின் ஆற்றல் ஆகியவற்றை இருநாடுகளின் நட்புறவும் வெளிப்படுத்துகின்றன" என்று பதிவிட்டுள்ளார். மேலும், அமெரிக்க மக்களுக்கு 140 கோடி மக்களின் சார்பாக எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் எனவும் மோடி தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+