மம்தாவுக்கு இடியை இறக்கிய புதிய தலைவர்! நம்பி பதவி கொடுத்தாரே.. அதிரும் மே.வங்க அரசியல் களம்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பறிகொடுத்த நிலையில் அக்கட்சி பிளவை சந்தித்துள்ளது. இதனால், தனது நம்பிக்கைக்குரியவர் என்று கருதி கடந்த மாதம் 5 ஆம் தேதி சந்திரிமா பட்டாச்சார்யாவுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை கொடுத்தார். ஆனால் ஒரே மாதத்தில் பதவியை ராஜினாமா செய்து விட்டு அதிருப்தி குழுவினரை பட்டாச்சார்யா சந்தித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் கடந்த 15 வருடங்களாக ஆட்சியில் இருந்த மம்தா பானர்ஜி சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் படுதோல்வியை சந்தித்தார். அவரது கட்சி மொத்தம் உள்ள 294 இடங்களில் 81 இடங்கள் மட்டுமே வெற்றியை பெற்று பெரும் தோல்வியை சந்தித்தது. பாஜக ஆட்சியை பிடித்தது. சட்டமன்ற தேர்தல் தோல்வியால் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது.

மம்தா தலையில் இடி!
மம்தாவுக்கு எதிராக எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏ ரிதப்பிரதா பானர்ஜி தலைமையில் அக்கட்சியின் மொத்தமுள்ள 80 எம்.எல்.ஏக்களில் 60 பேர் தனியாக இயங்க தொடங்கியுள்ளனர். மேற்கு வங்க எதிர்க்கட்சி தலைவாராகவும், ரிதபிரதா நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். ககோலி கோஷ் தஸ்திதார் தலைமையில் 20 எம்பிக்களும் செயல்படுகின்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மம்தா பானர்ஜி கட்சியில் அனைத்து குழுக்களையும் கலைத்து உத்தரவிட்டதோடு, புதிய தலைவராக மாஜி அமைச்சர் சந்திரிமா பட்டாச்சார்யாவை கடந்த ஜூன் 3 ஆம் தேதி நியமனம் செய்தார். ஒரு மாதமே ஆன நிலையில், சந்திரிமா பட்டாச்சார்யாவும் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சூட்டோடு சூடாக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் குழுவையும் போய் சந்தித்தார். இது மம்தா தலையில் இடியை இறக்கியுள்ளது.
என்னை கொல்ல வேண்டும் - மம்தா
கட்சியின் தலைமை அலுவலகத்தையும் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் குழு கைப்பற்றிய நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் பவனின் சாவியை நான் ஒப்படைத்ததாக மம்தா பானர்ஜி என் மீது குற்றம் சாட்டினார் எனவும், இது தனக்கு வேதனையை அளித்ததால், ராஜினாமா செய்தேன் என்றார். இந்த பரபரப்புக்கு இடையே வீடியோ ஒன்றை வெளியிட்ட மம்தா பானர்ஜி, அதிருப்தியாளர்களை துரோகிகள் என்று சாடினார்.
மேலும், மம்தா கூறுகையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சின்னம் என்வசமே உள்ளது. அதனை கைப்பற்ற அதிருப்தி அணியினர் நீண்டகால சட்டப் போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். கட்சியின் சின்னம் எங்கும் செல்லாது. என்னை தடுக்க வேண்டுமென்றால், முதலில் என்னைக் கொல்ல வேண்டும்," என்று மம்தா பானர்ஜி ஆவேசமாக கூறினார்.












Click it and Unblock the Notifications