திமுக கூட்டணி தற்போது இல்லை.. 3 மாதம் கூட தவெக ஆட்சி தாங்காது என்பதா? கொந்தளித்த சிபிஎம் சண்முகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் தற்போது திமுக தலைமையிலான கூட்டணி இல்லை என்றும், பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தவெக அரசு மூன்று மாதம் கூட நீடிக்காது என்று கூறுவது தவறு என்றும் சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், மாநில நலன் சார்ந்த பிரச்சினைகளில் திமுகவுடன் இணைந்து செயல்படுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சி மூன்று மாதம் கூட தாங்குமா என்று தெரியவில்லை என முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் விமர்சித்து இருந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பேசியுள்ளார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு அரசு மூன்று மாதம் கூட தாங்காது என சொல்வது தவறு என காட்டமாக கூறியுள்ளார் சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம்.

P Shanmugam Says There Is No DMK Alliance in Tamil Nadu at Present

திமுக கூட்டணி இப்போது இல்லை

புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்தியா கூட்டணியில் இடதுசாரி கட்சிகள் உள்ளன. தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் தற்போது யாரும் இல்லை. இந்தியா கூட்டணியில் திமுக நிலை குறித்து விரைவில் தெரியும்.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு மூன்று மாதம் கூட தாங்காது என்று சொல்வது தவறு. அது மு.க ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி என யார் கூறினாலும் தவறுதான். நாங்கள் தவெகவுக்கு ஆதரவு கொடுத்தது அன்றைக்கு இருந்த சூழலில் சரியான முடிவு. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு அமைவது முக்கியமானது. திமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதிமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. மூன்றாவது உள்ள ஒரே கட்சி அவுங்கதான்.

யாருடைய ஒப்புதலுடன் எடுக்கப்பட்ட முடிவு இல்லை

யார் கூட்டணியில் இருந்து வெற்றி பெற்றோம் என்பது முக்கியமல்ல. தவெவுக்கு ஆதரவு என்பது நாங்கள் சுயேச்சையாக எடுத்த முடிவு. தமிழ்நாட்டு நலன் சார்ந்த பிரச்சினைகள், மாநில உரிமைகளில் ஒத்த கருத்துடைய பிரச்சினைகளில் திமுகவுடன் சேர்ந்து போராடுவோம் என்று அன்றைக்கே சொல்லிவிட்டோம். அதே நிலைப்பாடுதான் இன்றும்.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தவெகெவுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பது என்பது யாருடைய தூண்டுதலுடனும், ஒப்புதலுடன் எடுக்கப்பட்ட முடிவு அல்ல.

8 ஆம் தேதியே இதை சொல்லிவிட்டோம். இதை வேண்டுமானால் ஸ்டாலினிடம் போய் கேளுங்கள். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி என்பது இப்போது இல்லை. அதேநேரத்தில் தமிழகம் நலம் சார்ந்த பிரச்சினைகளில் திமுகவுடன் இணைந்து போராடுவோம்" என்று கூறினார்.

ஸ்டாலின் பேசியது என்ன?

முன்னதாக பனையூர் பாபு தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில் இந்த ஆட்சி மூன்று மாதம் கூட தாங்குமா? என்று பேசியிருந்தார். இது தொடர்பாக ஸ்டாலின் பேசுகையில், "இன்றைக்கு தமிழ்நாட்டிலே நடந்து கொண்டிருக்கிற ஆட்சி எப்படிப்பட்ட ஆட்சி என்பதை பற்றி எல்லாம் நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே இந்த ஆட்சி பொறுப்பேற்ற நேரத்தில் சொன்னேன்.

6 மாதத்துக்கு எந்த பிரச்சினை பற்றி பேசப் போவதில்லை. ஆனால் 6 மாதத்துக்கு முன்பே பேச வேண்டிய ஒரு சூழ்நிலை வந்து விடுமோ என்ற அச்சம்தான் வந்து கொண்டிருக்கிறது, வந்து விட்டது. அதை பலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விமர்சனங்கள் எல்லாம் வந்து கொண்டிருக்கிறது. 6 மாதம் அல்ல, 5 மாதம் அல்ல. 4 மாதம் அல்ல, 3 மாதமாவது தாங்குமா? என்ற கேள்விக்குறியோடுதான் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தான் இன்றைக்கு நீங்களும் வந்து இந்த இயக்கத்தில் இணைத்து கொண்டிருக்கிறீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டணி கட்சிகளுடன் தவெக ஆட்சி:

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. தனிப்பெரும் கட்சியாக வென்ற போதிலுமும் மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்கள் தவெகவுக்கு கிடைக்கவில்லை. இதையடுத்து , திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் (5 எம்.எல்.ஏக்கள்), விசிக 2, கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 2 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2 எம்.எல்.ஏக்கள் என 11 எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்தனர். இதையடுத்து, தவெக ஆட்சி அமைத்தது. தவெக அமைச்சரவையில் காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவை அளித்து வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+