திரைக்கதை பல்கலைக்கழகம்.. காற்றோடு கலந்த கதைசொல்லி! பாக்யராஜ் உடல் அடக்கம் எப்போது? வெளியான தகவல்!
சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும், நடிகர் மற்றும் திரைக்கதை ஆசிரியரான பாக்யராஜின் மறைவு ரசிகர்களையும் திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று காலை நடைபயிற்சிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்த அவர் திடீர் மாரடைப்பால் காலமான நிலையில், அவரது இறுதி ஊர்வலம் தொடர்பான அறிவிப்பை நடிகர் பார்த்திபன் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, பாக்யராஜின் இறுதி ஊர்வலம் நாளை (ஜூன் 28) காலை 9.30 மணியளவில் நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், பொதுமக்கள், ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் நாளை காலை 9 மணி வரை அவரது இல்லத்தில் வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாக்யராஜின் மறைவு செய்தி வெளியாகியதிலிருந்து ஏராளமான திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் அவரது இல்லத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் அவரது மறைவுக்கு இரங்கல் செய்திகள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன.

பாக்யராஜ்
1953 ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி ஈரோடு மாவட்டம் வெள்ளகோவிலில் பிறந்த பாக்யராஜ், இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக தனது திரைப்பயணத்தை தொடங்கினார். பின்னர், 'சுவர் இல்லாத சித்திரங்கள்' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து 'அந்த 7 நாட்கள்', 'முந்தானை முடிச்சு', 'இன்று போய் நாளை வா', 'சின்ன வீடு', 'டார்லிங் டார்லிங் டார்லிங்' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியும், நடித்தும் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்தார்.
தமிழ் சினிமா
குடும்ப உறவுகள், நகைச்சுவை, காதல், உணர்வுப்பூர்வமான கதைகள் ஆகியவற்றை எளிமையாகவும், இயல்பாகவும் திரையில் சொல்லும் திறனால் அவர் தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குநராக அறியப்பட்டார். திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு என பல துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தியவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.
பாக்யராஜ் மறைவு
பாக்யராஜின் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பல முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது படைப்புகள் பல தலைமுறைகளுக்கும் நினைவில் நிற்கும் என்றும், தமிழ் சினிமாவுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு மறக்க முடியாதது என்றும் பலரும் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது மறைவால் தமிழ் திரைப்பட உலகம் ஒரு சிறந்த இயக்குநரையும், தனித்துவமான கதை சொல்லியையும் இழந்துள்ளது என பொதுமக்களும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இறுதி ஊர்வலம்
இந்நிலையில் பாக்யராஜின் உடல் அடக்கம் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் பார்த்திபன் வெளியிட்டுள்ள தகவலின்படி, பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக பாக்யராஜின் உடல் நாளை காலை 9 மணி வரை அவரது இல்லத்தில் வைக்கப்படும். அதன் பின்னர் காலை 9.30 மணியளவில் இறுதி ஊர்வலம் நடைபெற உள்ளது. பாக்யராஜின் இறுதி நிகழ்வில் திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முழு அரசு மரியாதை
தமிழ்த் திரையுலகில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு, இசை எனப் பன்முகத் திறமைகளால் முத்திரை பதித்து, மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த கே. பாக்யராஜ் அவர்களின் இறுதிப் பயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.














Click it and Unblock the Notifications