Anbe Diana review: அன்பே டயானா எப்படி இருக்கு? படத்தில் இதுதாங்க பிளஸ்! சிரிப்புக்கு பஞ்சமில்லை.. முதல் விமர்சனம் இதோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: தன்னுடைய முதல் படமான ஜமா படத்தின் மூலம் உலக அளவில் கவனம் பெற்ற இயக்குனர் பாரி இளவழகன் இரண்டாவது படமான அன்பே டயானா எப்படி எடுத்து இருப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்தது. இந்த நிலையில் நாளை ஜூலை 17ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பிரீமியர் காட்சியை பார்த்தவர்கள் பகிர்ந்துள்ள கருத்துக்கள் சோசியல் மீடியாவில் கவனம் பெற்று வருகிறது.

பாரி இளவழகன் இந்த படத்தின் கதையை எழுதி, இயக்கி, கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை ரம்யா ரங்கநாதன் நடித்திருக்கிறார். மில்லியன் டாலர்ஸ் ஸ்டுடியோ தயாரித்துள்ள இந்த படம் அவர்களின் வழக்கமான ஃபீல் குட் படங்களின் பட்டியலில் இன்னொரு வெற்றியாக அமையும் என்ற நம்பிக்கையை முதல் காட்சி ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

Anbe Diana Pari Elavazhagan Ramya Ranganathan Chetan Gopi Roja Million Dollar Studios Tamil Movie Review

அன்பே டயானா பட கதை

ஒரு தெலுங்கு இந்து குடும்பத்தை சேர்ந்த இளைஞனும், ஆங்கில இந்தியன் பொண்ணும் காதலிக்கும் போது உருவாகும் கலாச்சார பிரச்சனைகள், குடும்ப எதிர்ப்புகள், சாதி மனநிலைகள் ஆகியவற்றை முழுக்க காமெடி கலந்த திரைக்கதையுடன் சொல்லி இருக்கிறார் பாரி. எங்கும் பிரசங்கம் போல இல்லாமல் சிரிப்புக்குள் ஒரு இமேஜை வைத்திருப்பதால் படத்தின் பெரிய பலம் என்று கூறப்படுகிறது.

ஜமா போன்ற ஒரு சோசியல் அவர்னஸ் படத்தை கொடுத்து இயக்குநரா இந்த படத்தை கொடுத்திருக்கிறார் என்று கேட்கும் அளவிற்கு பாரி இளவழகன் முற்றிலும் வேறு ஒரு முகத்தை காட்டியிருக்கிறார். எழுத்து, இயக்கம், நடிப்பு என மூன்றிலும் அவர் நல்ல ஸ்கோர் செய்திருப்பதாக முதல் விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.

Anbe Diana Pari Elavazhagan Ramya Ranganathan Chetan Gopi Roja Million Dollar Studios Tamil Movie Review

கதாநாயகி

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் கவனிக்கப்பட்ட ரம்யா ரங்கநாதன் இந்த படத்தில் மேஜிக் டயானா கேரக்டரில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். அவருடைய தோற்றம், ஆங்கிலோ இந்தியன் உச்சரிப்பு, இயல்பான நடிப்பு எல்லாமே கதாபாத்திரத்துக்கு சரியாக பொருந்தி இருப்பதாக பலரும் பாராட்டி வருகின்றனர். அதுபோல படத்திற்கு மிகப்பெரிய பலமாக நடிகர் சேத்தனின் காமெடி போர்ஷன்கள் பேசப்படுகின்றன.

Parimala & Co OTT : ஓடிடியில் வந்த பரிமளா அண்ட் கோ படம்.. எதில் எப்போது பார்க்கலாம்? வெளியான தகவல்!
ஜமா படத்தில் பார்த்தாலே அடிக்க தோன்றும் அளவிற்கு வில்லத்தனம் செய்து கொண்டிருந்தவர் இந்த படத்தில் காமெடிகளில் புகுந்து விளையாடி இருக்கிறார். அவர் வரும் காட்சிகளில் தியேட்டர் முழுக்க சிரிப்பு வெடிக்கிறது என ரசிகர்கள் கூறுகின்றனர். அதுபோல ரோஜா அம்மா கேரக்டரில் ஸ்டிராங்காக கேரக்டரில் நடித்திருக்கிறார். பரிதாபங்கள் கோபியும் தன்னுடைய பங்குக்கு இரண்டாம் பாதியில் பல காமெடி காட்சிகளில் கைத்தட்டல் வாங்குகிறார்.

Anbe Diana Pari Elavazhagan Ramya Ranganathan Chetan Gopi Roja Million Dollar Studios Tamil Movie Review

படத்தின் குறைகள்

அதுபோல முதல் பாதி மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாவது பாதியில் படம் முழு வேகம் எடுப்பதாகவும் குறிப்பாக கடைசி 20 நிமிடங்கள் சிரிப்புக்கு பஞ்சம் இல்லை என பிரீமியர் பார்த்தவர்கள் கூறுகின்றனர். படம் முடிந்து வெளியே வரும்போது ஒரு விதமான திருப்தி உணர்வு கிடைக்கும் என்று சோசியல் மீடியாவில் பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

படத்தை பார்க்கலாமா?

அதே நேரத்தில் சில காட்சிகளில் கேமரா வேலை, சில கேரக்டர்களின் திடீர் மாற்றம், லென்த்தாக இருக்கும் சில எமோஷனல் பகுதிகள் போன்றவை மைனஸாக கூறுகிறார்கள். இருந்தாலும் அவை படத்தின் மொத்த அனுபவத்தை பெரிதாக பாதிக்கவில்லை என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது. குடும்பத்துடன் சிரித்து ரசிக்க ஒரு நல்ல கமர்சியல் படம் வேண்டும் என்றால் அன்பே டயானா நல்ல தேர்வாக இருக்கும் என்று முதல் விமர்சனங்களை சொல்ல தொடங்கி விட்டன.

ஜமா மூலம் சிந்திக்க வைத்த பாரி இளவழகன் இந்த முறை சிரிக்க வைத்து மனதை லேசாக்கி இருக்கிறார். முதல் நாள் காட்சிக்கு பிறகு இந்த வரவேற்பு தொடர்ந்தால் மில்லியன் டாலர் ஸ்டுடியோவிற்கு இது இன்னொரு வெற்றி படமாக அமைய வாய்ப்பு இருப்பதாக திரை உலக வட்டாரங்களும் எதிர்பார்க்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+