கேரளா பூஜா பம்பர்: தமிழருக்கு அடித்ததா ரூ.12 கோடி? அடையாளத்தை காட்டாமல் இருக்கிறாரா? பாலக்காடில் விழுந்த டிக்கெட்
திருவனந்தபுரம்: கேரளாவில் நேற்று முன் தினம் ரூ.12 கோடி முதல் பரிசு கொண்ட பூஜா பம்பர் லாட்டரி குலுக்கல் நடந்து முடிந்தது. இதில் முதல் பரிசுத் தொகை பாலக்காடில் டிக்கெட் வாங்கிய அதிர்ஷ்டசாலிக்கு அடித்துள்ளது. தமிழகத்தின் எல்லையோர மாவட்டம் என்பதால் ரூ.12 கோடி பரிசு வென்ற அதிர்ஷ்டசாலி தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருக்கலாம் என்றும், அடையாளத்தை காட்டாமல் இருக்கிறாரா? என்ற பேச்சும் கேரள சேட்டன்களிடம் அடிபடுகிறது.
அதே நேரத்தில் பூஜா பம்பர் லாட்டரி குலுக்கல் முடிந்து 2 நாட்களே ஆகியிருப்பதால் வரும் நாட்களில் லாட்டரியை வாங்கிய நபர், பரிசுத்தொகையை கோர வாய்ப்புள்ளது எனவும், வெற்றியாளர் பரிசுத்தொகையை உரிமை கோரும் போதுதான் இது உண்மையா? இல்லை யூகமா? என்று தெரியவரும் என்றும் கூறுகிறார்கள்.

தமிழகத்தை சேர்ந்தவருக்கு அடித்ததா?
கேரள லாட்டரி பிரியர்கள் பெரிதும் எதிர்பார்த்த பூஜா பம்பர் லாட்டரி டிக்கெட் குலுக்கல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் முதல் பரிசான ரூ.12 கோடி, JC 234427 - என்ற எண்ணுக்கு அடித்துள்ளது. பாலக்காடு மாவட்டத்தில் உள்ள கிங்ஸ் ஸ்டார் லாட்டரி ஏஜென்சியில் இந்த டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பூஜா பம்பரும் இந்த ஏஜென்சியில் விற்பனை செய்யப்பட்ட டிக்கெட் தானாம். இந்த ஆண்டு முதல் பரிசு அடித்த டிக்கெட்டை, கிங்ஸ் ஸ்டார் லாட்டரி ஏஜென்சியிடம் இருந்து கோவிந்தபுரத்தில் உள்ள ஒரு சப் ஏஜெண்ட் வாங்கி விற்பனை செய்துள்ளார். இதனால், வெற்றியாளர் யார் என்ற விவரம் இன்னும் தெரியவில்லை. தமிழகத்தின் எல்லையோர மாவட்டம் என்பதால், தமிழகத்தை சேர்ந்த பலரும் இப்பகுதியில் லாட்டரி வாங்கிவிட்டு செல்வது வழக்கம்.
எனவே, 12 கோடி பரிசு வென்ற அதிர்ஷ்டசாலி தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற பேச்சும் கேரள சேட்டன்களிடம் அடிபடுகிறது. எனினும், வெற்றியாளர் பரிசுத்தொகையை உரிமை கோரும் போதுதான் இது உண்மையா? இல்லை யூகமா? என்று தெரியவரும். பூஜா பம்பர் லாட்டரி குலுக்கல் முடிந்து 2 நாட்களே ஆகியிருப்பதால் வரும் நாட்களில் லாட்டரியை வாங்கிய நபர், பரிசுத்தொகையை கோர வாய்ப்புள்ளது.
அடையாளத்தை வெளிக்காட்டாமல் இருக்கிறாரா?
முதல் பரிசு வென்ற அதிர்ஷ்டசாலிக்கு முதல் பரிசு 12 கோடியில் வரி பிடித்தம் போக, சற்றேறக்குறைய ரூ.7 கோடி மட்டுமே கையில் கிடைக்கும். லாட்டரியில் முதல் பரிசு வென்றவர்கள் சமீப காலமாக தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் மறைப்பதை பார்க்க முடிகிறது. பரிசு வென்றது தெரிந்தால் நண்பர்கள், உறவினர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள் என்பதால் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் ரகசியமாக வாங்கி செல்கிறார்கள்.
எனவே பூஜா பம்பர் லாட்டரி வெற்றியாளரும் தனது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் பரிசுத்தொகையை வாங்கி செல்ல முடிவு செய்து வெற்றி பெற்றதை வெளிக்காட்டாமல் இருக்கிறாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கடந்த ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசாக ரூ.30 கோடி TL 360615 என்ற எண்ணுக்கு அடித்தது. கண்ணூரில் விற்கப்பட்ட டிக்கெட்டிற்கு முதல் பரிசு விழுந்த நிலையில் பரிசு வென்ற அதிர்ஷ்டசாலி தனது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் ரகசியமாக வாங்கி சென்றது குறிப்பிடத்தக்கது.
கையில் எவ்வளவு கிடைக்கும்?
குலுக்கல் முடிந்து 24 மணி நேரத்திற்கும் மேலாகிவிட்ட நிலையில், பூஜா பம்பரில் பரிசு வென்ற அதிர்ஷ்டசாலி தெரியாததால் கேரள லாட்டரி பிரியர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். இந்த சஸ்பென்ஸ்க்கு வரும் வாரத்தில் விடை கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பரிசு வென்ற அதிர்ஷ்டசாலி, வங்கி மூலமாகவோ, கேரள லாட்டரி துறையில் டிக்கெட்டை சமர்பித்தோ பரிசுத்தொகையை உரிமை கோர முடியும்.
முதல் பரிசு வென்ற அதிர்ஷ்டசாலிக்கு அப்படியே ரூ.12 கோடியும் முழுவதுமாக கையில் கிடைக்காது. 12 கோடி ரூபாயில் லாட்டரி ஏஜெண்ட் கமிஷனாக 12 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். சுமார் 30 சதவீதம் வருமான வரியாக பிடிக்கப்படும். எனவே மொத்த தொகையில் தோராயமாக 42 சதவீதம் கழிக்கப்பட்டு, மீதம் 58 சதவீதம் மட்டுமே 12 கோடியில் கிடைக்கும். அப்படி பார்த்தால் சுமார் 7 முதல் 8 கோடி ரூபாய் கையில் கிடைக்க வாய்ப்பு உள்ளது.





Click it and Unblock the Notifications
